லீக்கான குபேரா படத்தின் கதை.. எதிர்பார்ப்பை என்கிற வைக்கும் தகவல்..!

குபேரா படத்தின் கதை லீக் ஆகி உள்ளது.


dhanush in kubera movie story leaked

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது

மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஊழல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்க அவர்களுடன் நாகார்ஜுனா பணிபுரிந்து வரும் நிலையில் கணக்கில் உள்ள அனைத்து கருப்பு பணத்தையும் திரும்ப பெற அவர் ஒரு திட்டத்தை போடுகிறார் அதில் தனுஷ் உட்பட சில சாலையோர பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு போலி அடையாளங்களுடன் போலி தொழிலதிபராக மாற்றி கணக்குகளை திறக்க வைக்கிறார்.

இதில் நாகர்ஜுனாவுக்கு தெரியாத விஷயங்களை திட்டமிட்டு முழு அமைப்பையும் தனது லாபத்திற்கு தனுஷ் கொண்டுவர என்ன செய்கிறார் இது இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


dhanush in kubera movie story leaked
Dhanushdhanush in kubera movie story leakedkubera moviestory leakedகுபேராநாகர்ஜுனாராஷ்மிகா மந்தனாஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்