இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்பட டீஸருக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்தகட்ட படப்பிடிப்பில் படமாக்கவுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ்க்கு ஜோடியாக வாமிகா, காஃபி ஆகியோர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படம், முழுக்க ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. ஒளிப்பதிவாளராக முகேஷ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
‘டிசி’ படத்தை முடித்துவிட்டு, அடுத்து இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் லோகேஷ். இதன் நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கார்த்தி நடிப்பில் ‘கைதி-2’ படத்தையும் லோகேஷ் இயக்கவுள்ளார்.