ரூ.600 கோடியை எட்டுமா ‘கூலி’ திரைப்படம்?: படக்குழு எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படத்தை ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

இப்படம், கலவையான விமர்சனங்களால் இப்படத்தின் 2-ம் நாள் வசூலே இறக்கம் கண்டு ஆச்சரியம் அளித்தது. இதனால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் தடுமாறத் தொடங்கியது. தற்போது இப்படம் உலகளாவிய வசூலில் 500 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என படக்குழுவினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், 600 கோடி ரூபாயை எட்டும் என்ற சூழல் தற்போது நிலவுகிறது.

தமிழகத்தில் ‘கூலி’ திரைப்படம் இறுதி பங்குத் தொகையாக ரூ.70 கோடி அளவுக்கே இருக்கும் என கூறுகிறார்கள். மேலும், தமிழகம் தவிர்த்து இதர மாநிலங்களில் வசூல் எதிர்பார்த்த வகையில் இல்லை எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் ரூ.600 கோடியை எட்டும் அளவில் இப்படம் வசூல் சாதனை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

coolie movie has crossed rs 500 crore in box office collections
collectioncoolie movieRajinikanthரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்