பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ பட அப்டேட்ஸ்..

கோமாளி, லவ்டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன் என்பது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’.

இப்படத்தின் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால், இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் ‘ட்யூட்’ உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என தெரிகிறது.

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ட்யூட்’ படம். இப்படத்தில் சரத்குமார், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக நிக்கித் பொம்மி, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

‘ட்யூட்’ படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக பிரதீப் ரங்கநாதன் பாடி 3-வது பாடல் வெளியாகிறது. இப்படத்தின் மூலமாக பாடகராகவும் அறிமுகமாகி உள்ளார் பிரதீப். இவர் பாடிய பாடலை தனுஷ் குரலுடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்யவும் நெட்டிசன்ஸ் தயாராகி விட்டனர்.

change in dude film tamil nadu distribution
actor dhanushactor pradeep ranganathansongsட்யூட்பிரதீப் ரங்கநாதன்