Browsing category

Tamil News

ஜீவா நடிக்கும் தகப்பன் பட முதல் சிங்கிள் தங்கபுள்ள வெளியீடு!

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தகப்பன்’. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்பாடலை வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பாடலாசிரியர் பா. விஜய் வரிகள் எழுதியுள்ளார். முருகவேல் இப்பாடலைப் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழம், பிரிவின் வலி மற்றும் தந்தையின் அளவற்ற அன்பை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமாக இப்பாடல் […]

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி!

‘பலாகம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வேணு எல்தண்டி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘எல்லம்மா’. தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் பாடல் குறித்த சுவாரசியமான தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் […]

பொங்கலுக்கு வெளியாகிறது பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தர்மன்’, ‘சேயோன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் பரவி வரும் நிலையில், ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World […]

வேட்ட சாமி படத்தின் முதல் பாடல் வெளியானது!

தென் தமிழகத்தின் கிராமியத் திருவிழாக்கள் மற்றும் மக்களின் பண்பாட்டைத் தனது காந்தக் குரலாலும் வில்லுப்பாட்டு இசையாலும் கொண்டாடச் செய்தவர் வில்லிசைக் கலைஞர் மாதவி. தற்போது இவர் முதன்முறையாகத் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். ‘பம்பர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘வேட்ட சாமி’. இப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ என்ற லிரிக்கல் வீடியோ அக்டோபர் 30-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் […]

ரூ.50 ஆயிரம் நிதியுதவி… தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லெஜெண்ட் சரவணன்!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் அவரது கணவர், கடந்த நான்கு மாதங்களாக முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் உதவித்தொகை கிடைக்காததால், தங்களது நிலை குறித்து தனலட்சுமி சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுகளைக் கவனித்த நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன், உடனடியாகத் தனது நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு அந்தக் குடும்பத்துக்கு உதவ ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, அவரது சார்பில் ரூ.50 ஆயிரம் […]

அண்ணாமலையார் கோவிலில் மகன்களுடன் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் தனுஷை கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு, யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த இவர்கள், கடந்த 2022-ஆம் ஆண்டு தங்களது பிரிவை அறிவித்தனர். அதன்பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், மகன்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்களாக தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆன்மீகப் பயணமாக தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்றுள்ளார் […]

காதல் உறவில் துரோகம்… மனதளவில் உடைந்தேன் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா

காதல் உறவில் ஏற்பட்ட துரோகம்… அதிலிருந்து மீள நீண்ட காலம் தேவைப்பட்டது! கொரோனா ஊரடங்கு காலத்தில் சுய அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததே மனத் தெளிவைப் பெற உதவியது என நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது காதல் உறவு 2020-ஆம் ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த உறவில் ஏற்பட்ட துரோகத்தால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அதன்பிறகு தனது நேரத்தையும் கவனத்தையும் […]

என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை.. நடிகை கீர்த்தி சுரேஷ்!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘அக்கா’ தொடரில், நடிகை கீர்த்தி சுரேஷ் ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் ஆளப்பட்டு வரும் ஓர் அரசாட்சியின் பின்னணியில், அதிகாரம், பாரம்பரியம் மற்றும் விசுவாசத்தை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. பெர்னூரு என்ற பகுதியில், தங்களது பாரம்பரியத்தையும் அதிகாரத்தையும் பாதுகாத்து வரும் ஆட்சிக்கு ஒரு போட்டி பெரும் சவாலாக உருவாகிறது. தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், நம்பிக்கைகளைக் காப்பாற்றவும் பவானி பல்வேறு சோதனைகளையும் கடினமான முடிவுகளையும் எதிர்கொள்ள […]

50-வது பிறந்தநாளை முன்னிட்டு தாய்மார்களுக்கு ‘பட்டுசேலை’ வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரம் பகுதி மக்களுக்கு இலவசமாகப் பட்டுப்புடவைகளை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் ‘லாரன்ஸ் அறக்கட்டளை’ 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ஏழைத் தாய்மார்களுக்கு இலவசமாகப் பட்டுப்புடவைகள் வழங்கும் புதிய அறப்பணியைத் தொடங்குவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய தாய்மார்களுக்கு உதவ அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, இன்று (அக்டோபர் 29) […]

நடிகர் ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கொலையாளி அல்ல… நான் காதலன்!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. புதிய போஸ்டரில் ஷாருக்கானின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. உதடுகளுக்கு இடையே ரோஜாப்பூ, கைகளில் துப்பாக்கி, கண்களில் தீவிரம் என ஆக்‌ஷன் மற்றும் காதல் கலந்த தோற்றத்தில் அவர் காட்சியளிக்கிறார். ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் […]