Browsing category

Tamil News

வசூல் வேட்டையில் ‘ஜனநாயகன்’… 4 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழ்நாட்டில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ படத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருவதால், படத்தின் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது 4 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.85 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் […]

காதலி மனைவியானாள்… மனைவி மர்மமான முறையில் உயிரிழந்தாள் – திகில் கிளப்பும் ‘கருப்பட்டி’!

காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையை கணவன் தேடும் கதைக்களத்தில் உருவாகி வருகிறது புதிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘கருப்பட்டி’. கொளத்தூர் கிராமத்தில் தனது தாயுடன் வசித்து வரும் கருப்பட்டி, அதே ஊரில் தந்தையுடன் வசிக்கும் பவானியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பவானி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அதன்பிறகு பவானியின் ஆவி ஊரில் உள்ளவர்களை அச்சுறுத்தத் தொடங்குகிறது. இதையடுத்து, […]

சூர்யா குரலில் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ பட பாடல் வெளியானது!

“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு, தற்போது அடுத்த பாடலாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இப்பாடல், இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக மாறி வருகிறது. திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு ஆகியோர் தங்களது உற்சாகமான […]

“மாண்புமிகு மாணவ சமுதாயம்” – மாணவர்களின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் வி. ஹரிகிருஷ்ணன்

“இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம்; இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள்; எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது” என வி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்து, சமூக மேம்பாட்டிற்காகப் பாடுபடுவது அவர்களின் கடமையாகும். மாணவர்களின் எதிர்கால செயல்பாடுகள் நாட்டின் வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இன்றைய மாணவர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்களது […]

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகர் ஜெய்!

தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய்யை நடிகர் ஜெய் இன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அன்பும், பரஸ்பர மரியாதையும், நட்புணர்வும் நிறைந்ததாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யை தனது சகோதரர் எனக் குறிப்பிட்டுள்ள நடிகர் ஜெய், அவருடன் நேரம் செலவிட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய் கூறுகையில், “எனது சகோதரருடன் மிகவும் அன்பான மற்றும் மகிழ்ச்சியான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் சிறிது நேரம் செலவிட்டதற்கு நன்றியுடன் இருக்கிறேன். தமிழக […]

செப்டம்பர் 25 முதல் ‘மீசைய முறுக்கு 2’ அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, காதல், நட்பு, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2017-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மீசைய முறுக்கு’ படத்தின் 9-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படம், முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.41 கோடி நிகர வசூல் ஈட்டியுள்ளதாக வர்த்தக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். வர்த்தக கண்காணிப்பு தகவலின்படி, 13,067 காட்சிகள் மூலம் […]

சினிமா உலகில் மீண்டும் அதிகரிக்கும் பிரமாண்ட படங்களின் ஆதிக்கம்

இந்திய சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் நல்ல கதை, சிறந்த நடிப்பு, மனதில் நிற்கும் பாடல்கள் ஆகியவை மட்டுமே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானித்தன. ஆனால் தற்போது, அதனுடன் இணைந்து பிரமாண்டமான தயாரிப்பு, உயர்தர தொழில்நுட்பம் மற்றும் உலகத் தரத்திலான காட்சியமைப்புகளும் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால், இந்திய திரையுலகில் மீண்டும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் ஆதிக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. முன்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என […]

யோகி பாபுவுக்கு இரட்டை மகிழ்ச்சி!

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முடிவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ உள்ளிட்ட படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். இந்தப் படத்தில் கிஷோர், […]

கவின், நயன்தாரா நடித்த ‘ஹாய்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை எஸ். […]