Browsing category

Tamil News

ஜெயராம் – அஷ்வின் இணையும் ‘குட் நியூஸ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. திட்டமிட்டபடி நடைபெற்ற இந்த ஷெட்யூல், படக்குழுவினரின் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பால் சிறப்பாக நிறைவு பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் குழு மற்றும் தயாரிப்பு நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறையினரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதால், எந்த தடையும் இன்றி […]

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல்

ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தால் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நடிகை சிம்ரனின் நடனத்தை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வந்த நிஷா, சிம்ரன் நடித்த பாடல்களுக்கு அவரைப் போலவே நடனமாடி தொடர்ந்து பயிற்சி செய்து வந்துள்ளார். நிஷாவின் நடனத் திறமையை அறிந்த தன்னார்வலர் ஆஷிக், அவரது நடனக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, நிஷாவின் தன்னம்பிக்கை மற்றும் […]

துல்கரின் ஏஓடி படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (AOT) திரைப்படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்பாடல், திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இனிமையான மெலடியாக உருவாகியுள்ளது. கதாநாயகியின் பார்வையில் இடம்பெறும் இந்தப் பாடல், நட்சத்திரங்களைத் தொட வேண்டும் என்ற அவரது கனவையும், அந்தக் கனவை நோக்கி அவரை முன்னேறச் செய்யும் ஒரு ஆணின் அமைதியான ஊக்கத்தையும் அழகாகப் பதிவு செய்கிறது. வழக்கமான காதல் […]

வித்யுத் ஜம்வால் நடித்த ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து உருவாக்கியுள்ள இப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் வகையில், ஆக்‌ஷன் நடிகர் வித்யுத் ஜமால் இப்படத்தில் புகழ்பெற்ற யோகா குருவான தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள், விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் என ரசிகர்களை இருக்கையின் நுனியில் […]

துல்கர் சல்மானின் ஸ்ரீ ஸ்ரீ முதல் பாடல் வெளியீடு!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே கெமிஸ்ட்ரியில் வெளியாகிய ‘வானே வானே’ பாடல்! நடிகர் துல்கர் சல்மான் தனது 41வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் நடித்து வருகிறார். எஸ்.எல்.வி. சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இருவரும் முதன்முறையாக இணையும் இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளைக் கலந்து உருவாகி வருகிறது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படப்பிடிப்பு தள காட்சிகள் […]

‘அன்பே டயானா’ வெற்றிவிழா – படக்குழுவினர் நெகிழ்ச்சி!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து, பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்தனர். இதில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம் […]

போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் தனுஷ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது 43-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். தனுஷை சந்திக்க அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். ரசிகர்களின் உற்சாகமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட தனுஷ், அவர்களை நோக்கி கையசைத்து தனது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தினார். இதனிடையே, தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரி […]

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது ‘மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை’ சார்பில் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார். நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’ வழங்கி, தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி சௌந்தரராஜா கவுரவித்தார். இதுகுறித்து பேசிய அவர், விவசாயிகளுக்கு விருதும் ரொக்கப் பரிசும் வழங்கியது தனது வாழ்க்கையின் அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்று என தெரிவித்தார். கடந்த ஆண்டு […]

சசிகுமாரின் வதந்தி வெப் சீரிஸ் சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடரான ‘வதந்தி’யின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகத் தயாராகியுள்ளது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். […]

ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு அமித்ஷா வாழ்த்து!

இந்திய இலக்கியத்தின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 13-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய முன்னாள் அமைச்சர் கரண் சிங், ஞானபீட விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கி கௌரவித்தார். இந்நிலையில், ஞானபீட விருது பெற்ற வைரமுத்துவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கவிஞர் வைரமுத்துவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “இலக்கியம் […]