Browsing category

Tamil News

எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் – சிக்மா குறித்து ஜேசன் சஞ்சய்!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் குறித்து ஜேசன் சஞ்சய் பகிர்ந்த தகவல்கள்: ‘சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாகவும், அதே நேரத்தில் பதற்றமாகவும் இருப்பதாக இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அக்டோபர் 2-ம் […]

கேமரா எல்லாருக்கும் ஒன்றுதான்! – நடிகர் சித்து

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் பிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக படக்குழு […]

கமல்ஹாசன் மகளாக இருந்தும்…! – ஸ்ருதி ஹாசன் சொன்ன சுவாரஸ்ய தகவல்

தனது ஆரம்பகால திரைப்பயணம் குறித்து பேசியுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன், ஆரம்பத்தில் கேமராவுக்கு பின்னால் பணியாற்றவும், கதைகள் எழுதவும் தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார். தனது தாயாருடன் ஆடை வடிவமைப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தந்தை கமல்ஹாசன் நடித்த ‘ஹேராம்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு தற்செயலாக கிடைத்ததாகவும், அந்தப் படத்தின் முதல் காட்சிக்கான உடையை தானே வடிவமைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், “என் பெற்றோர் இருவரும் மிகவும் கண்டிப்பானவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. […]

மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு!

ரஜினிகாந்தின் 171-வது படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பு தற்போது மைசூருவில் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களாக மைசூருவில் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் ரஜினிகாந்த், அங்குள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை மைசூரு சாமுண்டி மலைக்கு சென்ற அவர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். கோயில் நிர்வாகம் சார்பில் ரஜினிகாந்துக்கு சிறப்பான […]

யோகிபாபு, சத்யாவின் கோல்டன் பாக்கியம் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியீடு

நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு பேனர்களில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு பேனர்களும் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை இணைக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம், வழக்கமான தமிழ் அல்லது தெலுங்கு திரைப்படமாக இல்லாமல், இரு மொழிகளையும் சேர்ந்த பிரபல நடிகர்களை ஒன்றிணைக்கும் ‘Telumil’ கிராஸ்ஓவர் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. படத்தின் கிளிம்ப்ஸ் நகைச்சுவையான காட்சியுடன் […]

மணிகண்டனின் மக்கள் காவலன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பைசன் காளமாடன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படமாக ‘மக்கள் காவலன்’ உருவாகியுள்ளது. லட்சியம், மன உறுதி, தடைகளைத் தாண்டி முன்னேறும் துணிச்சல் […]

திரிஷ்யம் 3 ஹிந்தி பதிப்பை வெளியிட தடை கோரி ஸ்ரீப்ரியா வழக்கு

ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகி வரும் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது ஒப்பந்த மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், வழக்கு விசாரணை முடிவடையும் வரை ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் இந்தி பதிப்பை […]

ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

நடிகர் ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராமாயணா’ படக்குழு ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திற்காக தயாரான விதத்தை வெளிப்படுத்தும் சிறப்பு BTS காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், ராமர் கதாபாத்திரத்திற்காக ரன்பீர் மேற்கொண்ட உடல் மற்றும் நடிப்பு தயாரிப்புகள், தோற்ற மாற்றங்கள் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், ராமர் கதாபாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்ட விதத்தை ரசிகர்கள் நெருக்கமாகக் காண முடிகிறது. ‘ராமாயணா’ போன்ற பிரம்மாண்டமான இதிகாசப் படத்திற்கு நடிகர்களைத் தேர்வு செய்வதில் இருக்கும் முக்கியத்துவம் […]

தென்னிந்திய ஓ.டி.டி தயாரிப்பாளர்கள் சங்கம் – நடிகை ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளைச் சேர்ந்த தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து ‘தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. நான்கு மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளதால், தென்னிந்திய தயாரிப்பாளர்களின் நலன்களுக்காக வலுவான ஒருங்கிணைந்த அமைப்பு உருவாகியுள்ளது. தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு […]