Browsing category

News

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பான்-இந்தியா திரைப்படமான ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் சார்மி கௌர் மற்றும் ஜேபி நாராயண் ராவ், […]

‘பிக் பாஸ்’ பிரபலம் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு விறுவிறுப்பு

‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான விக்கல்ஸ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னரில், விக்கல்ஸ் விக்ரமுடன் ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடித்துவருகிறார். இருவரின் புதிய திரை ஜோடி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் […]

5 மில்லியன் பார்வைகளை கடந்த ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல்!

ஸ்டைல், ஸ்வேக் மற்றும் கொண்டாட்ட உணர்வுகளை ஒன்றாகக் கலந்து ரசிகர்களை கவர்ந்துள்ள ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், வெளியாகி குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இந்தப் படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. […]

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

மகாகவி பாரதியாரின் ‘காதல் செய்வீர்’ பாடல் – ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தில் புதிய இசை வடிவில்! ஜூன் 26ஆம் தேதி வெளியாகவுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முதல் பாடலாக, மகாகவி பாரதியாரின் காலத்தால் அழியாத ‘காதல் செய்வீர்’ பாடல் வெளியாகியுள்ளது. மாநில அரசின் விருது பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த தீவிர கிரைம் டிராமா திரைப்படம், அதன் விறுவிறுப்பான கதைக்களம், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதையால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை […]

ராகவா லாரன்ஸ் அரசியல் வருகையா? திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வதந்திகளுக்கு ஜூன் 11-ல் முற்றுப்புள்ளி!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு, அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். மேலும், ஜூன் 11-ஆம் தேதி தனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் பரவிய வதந்தி சமீபகாலமாக திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் களம் காணப் போகிறார் என்ற செய்திகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வந்தன. இதுகுறித்து […]

நடிகர் ரவி மோகன் பொது வெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு!

திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய விவாகரத்து விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததற்காக நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) பொது வெளியில் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார். அவரது மனைவி ஆர்த்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து, நாளிதழ்களில் இந்த பொது அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பின்னணி: நீதிமன்றத் தடையும் கண்ணீர் பேட்டியும் நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு […]

கீது மோகன்தாஸ் பிறந்த நாளை முன்னிட்டு ‘டாக்ஸிக்’ படக்குழு வெளியிட்ட வீடியோ!

நடிகையும் இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘டாக்ஸிக்’ படக்குழு பிரத்யேகமான படப்பிடிப்பு தள காணொலியை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த வீடியோ, ஒரு இயக்குநராக கீது மோகன்தாஸின் படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் செயல்பாட்டு திறனை ரசிகர்களுக்கு நெருக்கமாக காட்டும் அரிய தருணமாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள காணொலியில், காட்சிகளை வடிவமைத்தல், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைத்தல், நடிகர்களின் நடிப்பை வழிநடத்துதல் மற்றும் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழுவை துல்லியமாக வழிநடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கீது மோகன்தாஸ் […]

வெளியானது மஞ்சுமல் பாய்ஸ் பட இயக்குநரின் ‘பாலன் தி பாய்’ படத்தின் ட்ரெய்லர்

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘பாலன் தி பாய்’ திரைப்படம் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் Marche du Film பிரிவில் திரையிடப்பட்ட இப்படம், சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியீட்டிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பாலன் தி பாய்’ […]

‘டெக்​சாஸ் டைகர்’ படப்​பிடிப்பு நிறைவு

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இசைத்துறையில் முன்னணி இடத்தை வகிக்கும் சோனி மியூசிக், இளம் படைப்பாளர்களின் முயற்சியான ‘டெக்சாஸ் டைகர்’ படத்துடன் இணைந்திருப்பது திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் படத்தின் இசை, உள்ளடக்கம் மற்றும் வணிக சாத்தியங்கள் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]

தனுஷின் மருமகன் பவிஷ், குஷ்பு மகள் அவந்திகா நடிக்கும் “அட்டாக்கர்”

பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘அட்டாக்கர்’ படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Zinema Media and Entertainment Limited நிறுவனம் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கும் இந்த படம், நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கும் இப்படம், முன்னதாக இயக்குநர் பா. இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் களமிறங்குகிறார். வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அட்டாக்கர்’, தமிழ் […]