Browsing category

News

‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மைலோ இயக்கியுள்ள ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA: Phase One – The Arrival) திரைப்படம், ஹாரர், சயின்ஸ் பிக்ஷன், சூப்பர்நேச்சுரல் ஃபேண்டஸி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கன்னட நடிகை அத்விதி ஷெட்டி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் துருவா, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, […]

விரைவில் வெளியாகும் மர்மம் நிறைந்த ‘அரூபி’!

மலையாளத்தில் உருவாகியுள்ள திகில்-மர்மத் திரைப்படமான ‘அரூபி’யின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. “சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தை விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. […]

எந்த நாட்டுக்குப் போனாலும் பாகுபலி என்றுதான் அழைக்கிறார்கள் – பிரபாஸ்

‘பாகுபலி: தி பிகினிங்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் படம் தனது வாழ்க்கையையும், உலகளாவிய அடையாளத்தையும் எவ்வாறு மாற்றியது என்பது குறித்து நடிகர் பிரபாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். “Baahubali: The Torch Bearer” வெளியீட்டை முன்னிட்டு அளித்த பேட்டியில், உலகின் பல நாடுகளில் மக்கள் தன்னை பெயரால் அல்ல, ‘பாகுபலி’ என்றே அடையாளம் கண்டு அழைப்பதாக அவர் பகிர்ந்துகொண்டார். “இத்தாலியில் கூட மக்கள் என்னைப் பார்த்து ‘பிரபாஸ்’ என்று அழைத்திருக்கிறார்கள். பெருவுக்கு […]

இந்தக் காலத்தில் நம்மைப் பற்றி நாமேதான் சொல்லிக் கொள்ள வேண்டும்: நடிகர் சித்து பேச்சு!

கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. தொலைக்காட்சி நடிகர் சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். “A Sidhu Investigation” என்ற டேக்லைனுடன் இப்படம் ஜூலை 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா […]

யோகி பாபுவின் “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” பட பூஜை விழா!

Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விளையாட்டை மையமாகக் கொண்ட நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை கே. ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். […]

ரவி மோகனின் கராத்தே பாபு வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில், கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கராத்தே பாபு’ ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. விறுவிறுப்பான அரசியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான முன்னோட்டம் மற்றும் பாடல்களின் மூலம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி மோகனின் 34-வது படமாக உருவாகும் ‘கராத்தே பாபு’, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரவி மோகனுடன் இணையும் […]

ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், […]

கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

இன்றைய திரைப்பட விளம்பர உலகில் பெரும்பாலான படங்களின் ஃபர்ஸ்ட் லுக் பிரபலங்கள் மூலமாகவோ அல்லது டிஜிட்டல் தளங்கள் வழியாகவோ வெளியிடப்படுவது வழக்கமாகியுள்ளது. ஆனால் இதற்கு மாறாக, ‘என்ன விலை’ திரைப்படக் குழு ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. தனுஷ்கோடி அருகே உள்ள பாலம் கிராமத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வையை, அந்தக் கிராம மக்களே ஒன்றுகூடி வெளியிட்டுள்ளனர். படப்பிடிப்பு காலத்தில் தங்களை அன்புடன் வரவேற்று முழு ஒத்துழைப்பு வழங்கிய கிராம மக்களுக்கு நன்றி […]

கவின் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் தொடக்க விழாவை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கிளாப் அடித்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின், இப்படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘தண்டட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் சங்கையா இப்படத்தை […]

எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கே முதலில் நன்றி – பவிஷ் உருக்கமான பேச்சு

மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தை Zinema Media & Entertainment பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.ஜி. முத்தையா பணியாற்றியுள்ளார். இசையமைப்பில் Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்துள்ளனர். எடிட்டராக என்.பி. ஸ்ரீகாந்த் பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் […]