Browsing category

News

அம்மன் துதி பாடிய சூர்யா,விஜி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விவேக் மற்றும் விஜி இருவரும் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு இருக்க, சூர்யா போன் போட்டு நந்தினிக்கு அம்மா போட்டு இருக்கும் விஷயத்தை […]

வித்தியாசமான லுக்கில் பிக் பாஸ் வினுஷா தேவி.. போட்டோஸ் இதோ.!!

வித்தியாசமான லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் வினுஷா தேவி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் வினுஷா தேவி. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பனி விழும் மலர்வனம் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

டிஆர்பி இல் டாப் 5 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன? முன்னேற்றத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.!

டிஆர்பி யில் டாப் 5இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் 5 இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. சிங்கப் பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. சிறகடிக்க ஆசை 4. எதிர் நீச்சல் 5. கயல் இந்த […]

காஞ்சனா 4 படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

காஞ்சனா 4 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராக ராகவா லாரன்ஸ் தெரிவதைவிட பலருக்கு சிறப்பான உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் தொடர்ந்து காஞ்சனா மூன்று பாகம் வரை நடித்திருக்கும் நிலையில் தற்போது நான்காம் பாகம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே,நோரா படேஹி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. […]

விக்ரம் நடிக்கும் அடுத்த பட இயக்குநர் யார்?

‘வீர தீர சூரன்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்றாலும், விக்ரமின் அடுத்த பட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் இருவருடைய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இரண்டு இயக்குநர்களுமே வேறொரு நாயகனை வைத்து படங்கள் இயக்கவுள்ளார்கள். இதனால், விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம்குமார் விக்ரமை சந்தித்து கதையொன்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தினை சாந்தி […]

எனது பயணம் முடிவடையவில்லை, தொடக்கமே: விஷால் அறிக்கை..

தமிழ்த்திரையில் ‘செல்லமே’ படம் மூலம் அறிமுகமானவர் விஷாலின் திரைப் பயணம் 21 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், ‘இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் என் பெற்றோருக்கும், என் குருநாதர் அர்ஜுன் அவர்களுக்கும், லயோலா கல்லூரி ஆசிரியர் பாதர் இராஜநாயகம் அவர்களுக்கும், மேலும் என்னை உயர்த்தி அழகு பார்த்த அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றியினை […]

நடிகர் கருணாஸின் மகன் இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம், அப்டேட்ஸ்..

பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கருணாஸ். பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹீரோவாகவும் உருவெடுத்தார். இந்நிலையில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது அவரே இயக்கி, படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார். ‘காதலன்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தின் நாயகிகளாக ஸ்ரீதேவி, அனிஷ்மா மற்றும் ப்ரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் […]

ரஜினியின் வாழ்த்து; சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் கெரியர் மாஸாகி விட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மதராஸி’ படம் வார இறுதிநாட்களில் நல்ல வசூல் செய்தாலும், வார நாட்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வசூல் செய்து வருகிறது. இதனிடையே, இப்படத்தினை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் ரஜினி. ரஜினியின் பாராட்டு தொடர்பாக சிவகார்த்திகேயன், ‘மதராஸி’ படத்துக்காக என் தலைவரிடம் இருந்து பாராட்டுகளை இப்போது தான் பெற்றேன். ஓ […]

எனது வீட்டை பள்ளியாக மாற்றி, இலவசக்கல்வி கொடுக்க திட்டம்: ராகவா லாரன்ஸ் முடிவு

தமிழ் சினிமாவில் முனி, கஞ்சனா 2, காஞ்சனா 3 என திரில்லர் படங்களில் நடித்துள் ராகவா லாரன்ஸ், தற்போது காஞ்சனா- 4 படத்தில் நடிக்கிறார். சினிமா தவிர்த்து தன்னால் முடிந்தளவிற்கு லாரன்ஸ் டிரஸ்ட் மூலமாக ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார். இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அதில், காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. எப்போதும் படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினால், அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல […]

ரஜினி-கமல்-ஸ்ரீதேவியின் காதல்: குட்டி பத்மினி பேச்சு வைரல்..

ஸ்ரீதேவியை போன்றே குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த குட்டி பத்மினி பேசிய வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறியதாவது; ‘கமல் சாருடன் சேர்ந்து தொடர்ந்து நிறைய படத்தில் நடித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி. அந்த நேரத்தில் ஒரு படத்தில் கமல் சார் ஹீரோ. நானும், ஸ்ரீதேவியும் ஹீரோயின்கள். ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீதேவிக்கு கமல் சார் மீது ரொம்ப அன்பு, ஆசை இருந்தது. சின்ன வயதில் எல்லோருக்கும் வரும் ஈர்ப்பு என்று […]