மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், தனது உடல் எடையை 26 கிலோ குறைத்தது எப்படி?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் காதல் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர், தனது குண்டான உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். அவ்வகையில், எடையை 26 கிலோ வரை குறைத்துவிட்டார். போனி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தவர்கள் வியந்து கேட்கின்றனர்.

போனிகபூர் ஜிம்முக்கு செல்லவில்லை. அங்கு கடுமையாக ஒர்க் அவுட் செய்யவில்லை. அதே சமயம் ஃபேன்சியான டயட் எதையும் பின்பற்றவில்லை. தினமும் காலை பழங்கள், பழச்சாறு, சோள ரொட்டி சாப்பிடுகிறாரார். இரவு உணவாக சூப் மட்டும் குடிக்கிறார். இப்படி செய்து, தன் எடையை வெகுவாக குறைத்துவிட்டார் போனி கபூர் என கூறப்படுகிறது.

போனிகபூர், தன் உணவுப் பழக்கத்தில் எளிமையான மாற்றத்தை கொண்டு வந்து எடையை குறைத்ததை சிலர் பாராட்டுகிறார்கள். மேலும் சிலரோ, மதிய உணவாக மாத்திரை சாப்பிடுவாரோ எனவும் விமர்சிக்கின்றனர்.

முன்னதாக, ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டபோது போனி கபூர் ஸ்லிம்மாக இருந்தார். திருமணத்திற்கு பிறகே அவர் வெயிட் போட்டுவிட்டார். இதை ஸ்ரீதேவியே போனி கபூரிடம் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், மறைந்த மனைவி ஆசைப்பட்டதுபோல ஸ்லிம்மாகிவிட்டார். திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஸ்ரீதேவியின் பழைய புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு ஃபீல் செய்திருக்கிறார் போனி கபூர். மேலும், ஸ்ரீதேவியின் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இது பற்றி நெட்டிசன்ஸ், ‘காதல் மனைவியை ரொம்ப மிஸ் பண்ணுகிறார்’ என்கிறார்கள் ரசிகர்கள்.

boney kapoor weight loss stuns celebs and cinema fans

 

actress sridevilove marriageproducer boney kapoorநடிகை ஸ்ரீதேவிபோனிகபூர்