நயன்தாரா சிம்புவுக்கு அப்புறம்..நானும் ராபர்ட்டும்.. உண்மையை உடைத்த வனிதா விஜயகுமார்.!

நயன்தாரா சிம்புவுக்கு அப்புறம் நானும் ராபர்ட்ரும் இப்படி செய்திருக்கோம் என வனிதா விஜயகுமார் பேசியிருக்கிறார்.

biggboss vanitha vijayakumar latest speech viral

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார் இவரது மகளான வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

தற்போது இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இவரது மகள் ஜோவிகா தயாரிப்பிலும் இவரது முன்னாள் கணவர் ராபர்ட் ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருக்கிறார். இந்த நிலையில் ராபர்ட் உடன் இணைந்து நடித்தது குறித்து பேசி உள்ளார்.

அதாவது பிரேக்கப் செய்த பிறகு ராபர்ட் உடன் கணவன் மனைவியாக ஒரு படத்தில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.மறந்து விட்டோம் பிரிந்து விட்டோம் அவரவருக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.ஆனாலும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். பிரேக்கப் செய்து பிரிந்த பின் நயன்தாரா சிம்பு இருவரும் சேர்ந்து நடித்தார்கள் அதன்பின் ராபர்ட்டும் நானும் சேர்ந்து நடித்திருக்கிறோம்.

சூட்டிங் ஸ்பாட்டில் எங்களுக்குள் சண்டை அடிக்கடி வரும் ஆனால் மறுநாள் நாங்கள் சரியாகிவிடுவோம் எங்களுடன் வேலை பார்த்தவர்கள் தான் மண்டையை உடைத்துக் கொள்வார்கள் என்று பேசி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss vanitha vijayakumar latest speech viral
biggbossbiggboss vanitha vijayakumar latest speech virallatest speechVanitha Vijayakumarviralசிம்புநயன்தாராவனிதா விஜயகுமார்ஜோவிகா