இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மேனேஜராக இருக்க அருணுக்கு தகுதி இல்லாததால் அவர்கள் தொழிலாளிகளுடன் சேர்ந்து கொள்ளுமாறு சகப் போட்டியாளர்கள் முடிவு எடுத்துச் சொல்ல சௌந்தர்யா அதில் எனக்கு உடன்பாடு இல்லை பிக் பாஸ் என்று கூறியுள்ளார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் முத்துக்குமரன் சைக்கிள் வீலை காலில் சுத்தாததால் பாத்ரூமில் தண்ணியை கட் பண்ணுகிறார் பிக் பாஸ். இதனால் போட்டியாளர்கள் முத்துக்குமரன் மேல் கோபப்படுகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது