அமீர் மற்றும் பாவணியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். அதே நிகழ்ச்சியில் அமீரும் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த நிகழ்ச்சியில் திருமண வாழ்க்கை குறித்து பாவனி கூறியது அனைவர் கண்களையும் குளமாக்கியது. பிக் பாஸ் முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து இருந்தனர்.
தற்போது இவர்களின் ஹல்தி பங்க்ஷன் கோலாகலமாக ஆட்டம் பாட்டத்துடன் நடந்து முடிந்த நிலையில், நேற்று திருமணமும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அதில் பிரியங்கா தாலியை எடுத்து கொடுக்க அமீர் தாலி கட்டுகிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் இந்த காதல் ஜோடிக்கு ரசிகர்கள் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.