பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாச்சனா முதல் பதிவை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சாச்சனா. இவர் 24 மணி நேர எலிமினேஷன் என்ற அடிப்படையில் போன வேகத்தில் வெளியேற்றப்பட்டார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சாச்சனா அவருடைய விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்தார். ஆனால் நேற்று ஆட்கள் அதிகம் இருக்கும் காரணத்தினால் டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டது. அதில் முதலில் ஆனந்தி எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக சாச்சனாவும் எலிமினேஷன் செய்யப்பட்டார்.
பிக் பாஸில் இருந்து வெளியேறிய கையோடு சாச்சனா தனது முதல் பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், 24 மணி நேர எலிமினேஷனில் இருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் விளையாடுவது மிகவும் சவாலாக இருந்தது இந்த பயணத்தில் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். மேலும் பிக் பாஸ் இல்லத்தில் என்னை நம்பி எனக்கு ஆதரவளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.
இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் டேக்ஸ் செய்து நன்றி தெரிவித்தது மட்டுமில்லாமல் உங்கள் அன்பு மட்டுமே என் வாழ்க்கையில் வளர என்னை ஊக்குவிக்கும் உங்கள் எல்லோருக்கும் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று பதிவிட்டு உள்ளார். இவரின் இந்த பதிவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.