கோவா கேங்குடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் பிக் பாஸ் ரயான்.
bigg boss rayaan birthday celebration
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சில வாரங்களில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் நண்பர்களாக பழகிய சௌந்தர்யா,பவித்ரா, ஜாக்லின் ,ரயான் போன்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் வெளியிலும் அவர்களது நட்பை தொடர்ந்த வருகின்றனர். அந்த வகையில் ரயானின் பிறந்தநாளை சௌந்தர்யா பவித்ரா ஜாக்குலின் மூவரும் இணைந்து கொண்டாடி உள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.