காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ் ஜாக்லின் போட்ட பதிவு..!

காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிக் பாஸ் ஜாக்லின் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

Bigg Boss Jacqueline wishes her boyfriend a birthday

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் பின்னர் ரன்னராக சௌந்தர்யாவும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒன்று ஜாக்லின்.

இவர்தான் டைட்டிலை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக பண பெட்டை டாஸ்க் பணப்பெட்டியை குறித்த நேரத்தில் எடுத்துக்கொண்டு வர முடியாததால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் மீது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஜாக்குலின் அவரது instagram பக்கத்தில் என்னுடைய ஃபேவரைட் பர்சனின் பிறந்தநாள் என்று பதிவிட்டு அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

bigg boss jacquelineBigg Boss Jacqueline wishes her boyfriend a birthdaybirthdayboyfriendwishesபிக் பாஸ்பிக் பாஸ் சீசன் 8விஜய் டிவிஜாக்லின்