விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதோ ‘திராவிட வெற்றிக் கழகம்’ பற்றிப் பார்ப்போம்..
கடந்த 2016 ஆம் ஆண்டு யூடிப்பில் வெளியான ‘Ctrl Alt Del’ என்ற சீரிஸ் மூலமாக கலைப்பயணத்தை தொடங்கிய பிக்பாஸ் புகழ் அபிராமி 2017 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றார்.
பின்னர் 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான ‘நோட்டா’ படத்தின் வாயிலாக சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து ஓடிடியில் ரிலீசான ‘களவு’ படத்தில் நடித்தார். இதனையடுத்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரவேற்பினை பெற்றார். தற்போது சின்னத்திரையில் ‘நினைத்தேன் வந்தாய்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டர் தற்போது வைரலாய் பரவி வருகிறது. அதாவது, ‘திராவிட வெற்றிக் கழகம் ‘ என பெயரிடப்பட்ட போஸ்டரில் அரசியல்வாதி கெட்டப்பில் அபிராமி இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் நீங்களும் கட்சி ஆரம்பிச்சுட்டீங்களா? என கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், இது அபிராமி நடிக்கும் புதிய படம் ஒன்றின் போஸ்டர் என கூறப்படுகிறது.
இந்த பதிவுக்கான கேப்ஷனில், ‘புதிய தொடக்கம். நீங்க சொல்றதை கேட்க நாலு பேரு இருந்தாங்கன்னா, நல்லதையே சொல்லுங்க. நீங்கள் செய்றதை பார்க்க நாலு இருந்தாங்கன்னா நல்லதையே செய்யுங்க. களத்தில் சந்திப்போம்’ என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அறிவிப்பு விரைவில் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு, நெட்டிசன்கள் கலகலப்பாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையில் தொகுப்பாளர் அர்ச்சனா, பிக்பாஸ் லாஸ்லியா உள்ளிட்டோர் அபிராமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ‘ நான் தான் சிம்’ என்ற படத்தை பார்த்திபன் இயக்கி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பொங்கலை முன்னிட்டு 9-ந்தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகவுள்ளது நினைவுகூரத்தக்கது.