பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரகசியம் இதுதானா? ரவீந்தர் ஓபன் டாக்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஓப்பனாக பேசியுள்ளார் ரவீந்தர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் போட்டியாளராக வந்த ரவீந்தர் முதல் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார்.

அவர் வெளியேறிய உடன் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த பல ரகசியங்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அவர் கூறியது, நான் இந்த நிகழ்ச்சிக்கு பிட்டா இல்லனா உள்ள இருக்க முடியாது ஏன்னா 100 நாள் உள்ள இருக்குறதுக்கு அவங்களோட உடம்பு பிட்டா இருக்குதான்னு தெரியாம உள்ள அனுப்ப மாட்டாங்க எல்லா செக்கப்பும் எனக்கு பண்ணாங்க பண்ணி தான் நான் உள்ள போனேன் என்று சொல்லி உள்ளார்.

Bigg Boss 8 Ravinder Chandrasekaran open talk

முத்துக்குமரன் உண்மையான பாசத்தோடு இருப்பதாகவும் அவர் விளையாட்டை அருமையாக விளையாடுவதாகவும் கூறியுள்ளார். தர்ஷிகாவும் ஜாக்லினும் விளையாட்டை புரிதலுடன் விளையாடி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் பெண்கள் குண்டன் என்றும் சாப்பாடு போட முடியாது என்றும் கிண்டலாக பேசியதையும் சொல்லி உள்ளார்.

குறிப்பாக ஸ்மோக்கிங் ஏரியாவில் தான் அதிகமான பிளான் போடுவாங்க என்றும் பேசியுள்ளார். கேமராவிற்கு முன்னாடி மட்டும் ஏதாவது வேணுமா என்று நடிக்கிற மாதிரி தான் இருக்கு என்றும் பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..

Bigg Boss 8 Ravinder Chandrasekaran open talk
Arun PrasadBigg Boss 8 Ravinder Chandrasekaran open talkbiggbossbiggboss tamil 8JefferyRavindhar ChandrasekaranVijaysethupathivijaytvஅருண் பிரசாத்சாச்சனாபிக் பாஸ்முத்துக்குமரன்ரவீந்தர்விஜய் சேதுபதிவிஜய் டிவிஜெஃப்ரி