சுதாகரை மிரட்டிய பாக்யா,எழில் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகரை கோபத்தில் பாக்யா மிரட்ட எழில் வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 25-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வர அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் வெளியில் வைத்து இருக்கின்றனர் சுதாகர் மேனேஜரிடம் எனக்கு தேவையான முக்கியமான பொருள் உள்ள இருக்கு என்று சொல்லி நான் எடுத்துக்கிறேன் என்று கேட்கிறார் ஆனால் மேனேஜர் இருங்க நான் சார் கிட்ட பேசிட்டு வரேன் என்று சொல்லி பேசிவிட்டு வெளியில் வந்து உங்களை உள்ள விடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து எழில் வர யார் ரெஸ்டாரண்டுக்கு யார் வரக்கூடாதுன்னு சொல்றது என்று கோபப்படுகிறார் அமைதியாக இரு எழில் என்று சொல்லி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த நேரம் பார்த்து வேலை செய்யவும் ஆட்கள் ராமமூர்த்தியின் போட்டோவை தூக்கி எறிகின்றனர்.

இதனால் பாக்கியா எழில் மேனேஜரின் சட்டையை பிடித்து சண்டை போட போகிறார். பாக்கியா அவர்களை தடுத்து நிறுத்தி போட்டோவை எடுத்துவிட்டு, இவங்க கிட்ட பேசினா வேலைக்காகாது பேச வேண்டிய உங்க கிட்ட பேசணும் என சொல்லி சுதாகரை சந்திக்க வருகிறார். அங்கு இருப்பவர் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கெல்லாம் பாக்யா பதில் சொல்லாமல் நேராக சுதாகர் ரூமுக்கு வருகிறார். உடனே சுதாகர் வாங்க சம்மந்தி என்ன சர்ப்ரைஸ்ஹா வந்து இருக்கீங்க என்று கேட்க நீங்க பண்றது எதுவுமே சரி இல்ல, என் மாமனார் போட்டோவை தூக்கி வெளியே போட சொல்லி இருக்கீங்க என்று சொல்ல நானே உங்கள ரெஸ்டாரன்ட் விட்டு போங்கன்னு சொன்னேன் அப்ப ஏன் முக்கியமானது எல்லாம் எடுத்துட்டு போயிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது என்று சொல்ல நீங்க வேணும்னு தான் இத பண்ணி இருக்கீங்க, ரெஸ்டாரன்ட்காக உங்க பையனோட வாழ்க்கையை அடமான வச்சிருக்கீங்க என்று சொல்ல ஒரு பொட்டி ரெஸ்டாரண்டுக்காக என்னோட பையன் வாழ்க்கையை நான் கெடுக்கல என்று சொல்ல, என்கிட்ட ஒரு மாதிரி பேசுறீங்க எங்க வீட்ல ஒரு மாதிரி பேசுறீங்க இனியா அப்பா கிட்ட ஒரு மாதிரி பேசுறீங்க, உங்களை இனிமே நம்பவே மாட்டேன் உங்களுக்கு வேணாம் உங்க பையன் மேல அக்கறை இல்லாம இருக்கலாம் ஆனா என் பொண்ணு மேல எனக்கு ரொம்ப அக்கறை இருக்கு ரெஸ்டாரன்ட் பிசினஸ் கூட விட்டுடுவ ஆனா எங்க மாமனார் போட்டோவ தூக்கி போட்ட மாதிரி இனியா ஒரு நாள் தூக்கி போடணும்னு நினைச்சீங்கன்னா அவ்வளவு தான் என்று மிரட்டுகிறார். அடுத்தவங்களை அழிச்சு முன்னேறனும் நினைக்கிற உங்களுடைய வெறி உங்களை ஒருநாள் அழிச்சிடும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் கோபி ஈஸ்வரி இடம் பாக்யா சொல்றது ஒரு மாதிரி இருக்கு அவர் சொல்றது ஒரு மாதிரி இருக்கு என்னால நம்பவே முடியல என்று சொல்லுகிறார் பாக்யாதான் ஓவரா பேசி இருப்பா பேசக்கூடிய ஆள் தானே என்று சொல்லி ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்க எழில் வருகிறார். என்னாச்சு என்று கேட்க நாங்க ரெஸ்டாரண்டுக்கு போனா அங்க அம்மா கொஞ்சம் திங்ஸ் கொஞ்சம் இருந்தது அவங்கள உள்ள கூட விடல என்று சொல்ல உங்க அம்மா ஏதாவது பேசினாளான்னு கேட்டா அம்மா வாயே திறக்கல அதுவும் இல்லாம தாத்தாவோட போட்டோவ தூக்கி வீசிறி அடிச்சிட்டாங்க என்று சொல்ல என் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே எல்லாத்துக்கும் காரணம் பாக்கியம் தானே ஈஸ்வரி சொல்ல கோபி எனக்கு என்னமோ பாக்கிய சொல்றது மாதிரி இருக்கும் போது நம்மகிட்ட ஒரு மாதிரி பாக்கி கிட்ட ஒரு மாதிரியா அவரு பேசுவார் என்று நினைக்க செழியன் அப்படி எல்லாம் இருக்காது பாவம் அப்படி பேசமாட்டார் என்று சொல்ல எழில் இன்னிக்கு வந்து அவரை நம்புவ அம்மாவ நம்ப மாட்டியா என்று எதுவும் பேசாமல் சென்று விடுகிறார்.

மறுபக்கம் ரெஸ்டாரண்டுக்கு வந்த பாக்கியா ராமமூர்த்தியின் போட்டோவை மாற்றி மாலை போட்டு இதுக்கு மேல உங்களுக்கு எந்த அவமானமும் நடக்க விடமாட்டேன் என சொல்லி சாமி கும்பிடுகிறார். பிறகு ரெஸ்டாரன்ட்டில் வேலை ஆட்கள் அதிகமாக இருப்பதால் அங்கங்கே நின்று பேசிக் கொண்டிருக்க இது மாதிரி இருந்தா எப்படிக்கா சம்பளம் கொடுக்க முடியும் என்று சொன்ன ஏதாவது பண்ணி தான் ஆகணும் செல்வி என்று சொன்ன இனியாவோட மாமனார போய் பாக்கணும்னு போனையே என்னாச்சு என்று கேட்க நிறைய பேசணும்னு போன ஆனா எதுவும் பேச முடியல இனியாவோட வாழ்க்கைக்கு மட்டும் ஆச்சுன்னா அவ்வளவுதான் சொல்லிட்டு வந்து இருக்கேன் என்று சொல்லுகிறார். பாக்கியாவை பழிவாங்க சுதாகர் என திட்டம் போடுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 25-04-25
BaakiyaBaakiyaLakshmi SerialBaakiyaLakshmi Serial Today Episode Update 25-04-25ChezhiyanEswariezhilgopiJeniSelviSudhagarViaytvஇனியாஈஸ்வரிஎழில்கோபிசெழியன்பாக்கியலட்சுமிபாக்யாராமமூர்த்தி