பாக்யா கேட்ட கேள்வி, சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா கேட்ட கேள்விக்கு சுதாகர் பதில் கொடுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 02-05-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகரிடம் பாக்யா பணம் கேட்டதற்கு வீட்டில் இருப்பவர்கள் திட்ட அதற்கு பாக்யா நான் ரெஸ்டாரண்டுக்காக வாங்கின 41 லட்சம் கடன் இருக்கு அதுக்கு என்ன பண்ணனும்னு முடிவு சொல்லிட்டு நீங்க பேசுங்க நான் எது சொன்னாலும் கேட்டுக்குறேன் இந்த வீட்டு அடமானம் வச்சு தான் வாங்கி இருக்கேன் ஏற்கனவே நான் ஆசையா உருவாக்கின ஒரு ரெஸ்டாரன்ட் இழந்துட்டு அந்த காயம் ஆறதுக்கு முன்னாடியே இன்னொரு ரெஸ்டாரன்ட் என் கையை விட்டு போயிடுச்சு இந்த வலியே என்னால தாங்க முடியல உடனே வீட்டையும் ஜப்தி பண்ணிட்டு போய்ட்டாங்கன்னா என்னால அதை ஏத்துக்க முடியாது என்று சொல்லுகிறார். இதுக்கு ஏதாவது முடிவு இருந்தா சொல்லுங்க என்று பாக்யா சென்று விட ஈஸ்வரி இவளுக்கு பணப்பை புடிச்சிருக்கு என்று சொல்லுகிறார்.

கோபி பாக்யா சொல்றதும் சரிதாம்மா என்று சொல்லிவிடுகிறார் மறுநாள் காலையில் சுதாகர் ஆஃபீஸில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க நீங்க நிஜமாகவே பணம் கொடுக்க போறீங்களா சார் என்று கேட்கிறார் ஆமா பேசுற வரைக்கும் பணம் கொடுக்காத அளவுக்கு பேசி பார்ப்போம் இல்ல பணம் தான் வாங்குவாங்கன்னா எதிர்பார்க்காத விட ரொம்ப கம்மியா குடுப்பேன் என சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து பாக்யா வர அவரை வரவேற்று உட்கார வைத்து பேசுகின்றனர். நீங்க எவ்வளவு எதிர்பார்க்கிறீங்க சம்பந்தி என்று கேட்க இடத்தோட டீடைல் நான் செலவு பண்ணது எல்லாம் இந்த பைலில் இருக்கு பார்த்துப்கோங்க என்று கொடுக்க சுதாகரின் மேனேஜர் எடுத்து பார்த்து அறுவது லட்சம்ல ரொம்ப அதிகம் என்று சொல்லுகிறார்.

ஆனால் நான் அந்த அளவுக்கு தான் காசு கொடுத்து வாங்கி இருக்கேன் என்று சொல்ல நீங்க ஏமாந்ததுக்கெல்லாம் நாங்க பொறுப்பாக முடியுமா என்று கேட்கின்றனர் அப்படி ஒன்றும் நான் யார்கிட்டயும் விசாரிக்காமல் அந்த இடத்தை வாங்கல எல்லாமே யோசிச்சு தான் வாங்கி இருக்கேன் என்று சொல்லுகிறார் நான் இப்போதைக்கு கவர்மெண்ட் ரேட்டுக்கு தான் வந்து இடத்துக்கு பணத்தை கொடுக்க முடியும் என்று சுதாகர் சொல்லி 15 லட்சம் தரேன் வேணும்னா அஞ்சு லட்சம் போட்டு 20 லட்சம் தரனது அவ்வளவுதான் நீங்க கிப்ட்டா கொடுத்ததுக்கு இன்னும் அவ்வளவு கொடுக்க முடியும் என்று சொல்லுகிறார்.

அதற்கு பாக்கியா இங்கே எங்க குடும்பத்துல இருக்குறவங்க யாரும் இல்ல நீங்க தைரியமா உண்மையை பேசலாம். நீங்க அதை கிப்ட்டா வாங்கல என்கிட்ட இருந்து அபகரிச்சு இருக்கீங்க என்று சொல்லுகிறார். வேணும்னா 40 லட்சம் தரேன்னு சொல்லுகிறார் மெயினான இடத்துல இருக்குற ரெஸ்டாரன்ட் நல்லா ஓடிக்கிட்டு இருக்க ரெஸ்டாரன்ட் என்று பேச ஆரம்பிக்க ஐம்பது லட்சம் அதுக்கு மேல பத்து ரூபா கூட தர மாட்டேன் என சொல்லுகிறார்.

எனக்கு கம்மியான ரேட்ல தான் ரெஸ்டாரன்ட் கொடுக்கிறேன் என்ன பண்றது தெரிஞ்சவங்களா போயிட்டீங்க என்று பாக்கியா சொல்லிவிட்டு பணத்தை கொடுத்து விடுவீங்களா என்று கேட்கிறார் இதோட பணத்தை கொடுத்துட்டீங்கன்னா ரெஸ்டாரண்ட்டால வர பிரச்சனை இதோட முடிஞ்சது என்று சொல்லுகிறார். என் பொண்ணுக்காக நடந்து விஷயத்தை மறந்து ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்ல இருக்கலான்னு முடிவு பண்ணி இருக்கேன். நான் மறந்துருவேன் நீ மறந்துவிடுவீர்கள் என்று நம்புகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சுதாகர் பணத்தை அனுப்பிவிட பேங்குக்கு சென்று கடனை அடைத்து விடுகிறார் பாக்யா செல்வியுடன் வந்து வேலை செஞ்சவங்கள வீட்டுக்கு கூட்டிட்டுவா செல்வி என்று பாக்யா சொல்லுகிறார்.

அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் என்ன பாக்கியா அக்கா எங்களுக்கு திருப்பி வேலை கொடுக்க போறியா என்று கேட்க என்னால அது உடனே பண்ண முடியாது எப்ப பண்ணுவான்னு தெரியாது ஆனால் உங்களுக்காக சேர வேண்டிய பணம் கொஞ்சம் இருக்கு என்று சொல்லி சொல்ல நீதான் ஏற்கனவே எனக்கு சம்பளம் கொடுத்துட்டியே அக்கா என்று சொல்லுகிறார் இது உங்களுக்கு சேர வேண்டிய பணம்தான் என்று சொல்லி எல்லாருக்கும் பிரித்து கொடுக்கிறார் செல்விக்கு கொடுக்க செல்வி வேண்டாக்கா நான் இவங்களை மாதிரி எல்லாம் உன் கூட பழகல என்று சொல்லுகிறார். உனக்கும் செலவு இருக்கும் நீ பாத்துகோ வரேன் ஏதாவது வேலை இருந்தா சொல்லு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

பிறகு ஈஸ்வரி என்ன கேட்கிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 02-05-25
BaakiyaBaakiyaLakshmi SerialBaakiyaLakshmi Serial Today Episode Update 02-05-25ChezhiyanEswariezhilgopiSelviSudhagarvijaytvஈஸ்வரிகோபிசுதாகர்செல்விபாக்கியலட்சுமிபாக்யா