குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பாக்யா மீது குறை சொல்லுகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட் சுதாகர் வாங்கி விட்டதாக சொல்ல கோபி சுதாகரின் வீட்டிற்கு வந்து நடந்த விஷயங்கள் பற்றி கேட்கிறார் அதற்கு சுதாகர் நான் சம்மந்தி அம்மாவோட இரண்டாவது ரெஸ்டாரன்ட் தான் வாங்கினேன். அதை வாங்கணும்னு கூட சொல்ல முடியாது கிஃப்ட்டா வந்தது முதல் ரெஸ்டாரன்ட் எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது என்று பொய் சொல்லி நாடகம் ஆடுகிறார். உடனே கோபி ரெஸ்டாரன்ட் முன்னாடி உங்களை பார்த்ததா பாக்கியா சொன்னா என்று சொல்ல எனக்கு தெரிஞ்சு சம்மந்திக்கு என்ன புடிக்கலைன்னு நினைக்கிறேன் அதனால தான் தேவையில்லாம கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல பிறகு கோபி அங்கிருந்து கிளம்ப அந்த நேரம் பார்த்து நிற்க வைத்து நான் ஒன்னு சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க ஏற்கனவே நீங்களும் சம்மந்தியும் விவாகரத்து பண்ணிட்டீங்க அப்புறமும் இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க அதுவும் ஃபெயிலியர் ஆயிடுச்சு இப்பயும் நீங்க முதல் மனைவிக்காக இவ்வளவு சப்போர்ட் பண்றீங்க என்று சொல்லுகிறார்.
உடனே கோபியின் முகம் மாற தப்பா நினைச்சுகிட்டு கேட்க இல்ல ஒன்னும் பிரச்சனை இல்லை நான் கிளம்புறேன்னு சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார் மறுபக்கம் செல்வி வீட்டில் பாக்கியா இருக்க காபி கொடுக்கிற காபி குடித்துக்கொண்டு நிஜமாவே இனியாவோட மாமனார் தான் அந்த ரெஸ்டாரன்ட் வாங்கி இருக்காரா அக்கா என்று கேட்க நான் என்ன பொய்யா சொல்ல போறேன் என்று சொல்லுகிறார் அவருக்கு தான் அவ்வளவு சொத்து இருக்கு அது போதாதா உன்கிட்ட வேற அடிச்சு புடுங்கணுமா என்று கேட்க அவர் இவ்வளவு மோசமானவரா இருப்பார் என்று நான் நினைக்கல என்ற பாக்யா சொல்லுகிறார். என்கிட்ட ஒன்னு பேசுறாரு எங்க வீட்டுல இருக்குறவங்க கிட்ட ஒன்னு பேசுறாரு என்று சொல்ல, அவர் பேசுவதை நம்ப வேண்டாம் என்று சொல்ல நான் எது பேசினாலும் இனிய வாழ்க்கையை கெடுத்துராதனு சொல்றாங்க என்று சொல்லுகிறார்.
அவர் வீட்ல இனியா வாழ்வது நினைச்சாவே எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல இனியாவோட வீட்டுக்காரர் நல்லா தானே பார்த்துக்கொள்கிறார் என்று கேட்கிறார் அவர் நல்லதா பாத்துட்டாரு ஏற்கனவே ரெண்டு ரெஸ்டாரன்ட் போயிடுச்சு இருக்கிறது வீடு மட்டும் தான் அதுவும் ஆச்சரியப்படுறதுக்கு எதுவும் இல்லை என்று சொல்ல அப்படி எல்லாம் பார்த்து செல்வின் மகன் ஆகாஷ் வருகிறார் ஆகாஷ் பாக்யாவிடம் நலம் விசாரிக்க அவரும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு செல்வியிடம் பார்த்தேன் வேலைக்கு சொல்லி இருந்தேன் போய் பேசிட்டு வரேன் என்ற கிளம்புகிறார். கிளம்பும்போது இனியா நல்லா இருக்காளா என்று கேட்டுவிட்டு சென்று விடுகிறார். செல்வி அவன் ஏற்கனவே பார்ட் டைம் வேலை போறேன்னு சொன்னா ஆனா நான் தான் படிக்கட்டுன்னு விட்டேன் ஆனா இப்ப நம்ம ரெஸ்டாரண்ட் இருக்கிற நிலைமை பார்த்தா அவனுக்கு பீஸ் கட்ட கூட பணம் இருக்காதுன்னு தான் வேலைக்கு போக சொல்லி இருக்கேன் என்று சொல்ல வேற எதுவும் நம்ம சின்னதா கூட ஆரம்பிக்க முடியாத அக்கா என்று கேட்க எதுவா இருந்தாலும் 10 லட்சம் இல்லாம நம்மளால ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
மறுபக்கம் கோபி காரில் வந்து கொண்டிருக்க பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் சுதாகர் கார் நின்று கொண்டிருப்பதை பார்த்து உள்ளே வந்து பார்க்க ஓனரிடம் சுதாகர் கைக்குலிக்கி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார் உடனே கோபியை பார்த்ததும் சுதாகர் சம்மந்தி அம்மாவுக்கு சந்தேகம் வந்ததுனால இங்க வந்து விசாரிக்க வந்தேன் பார்த்தால் இவர்தான் ரெஸ்டாரன்ட் வாங்கி இருக்காரு என்று வேறொருவரை கை காண்பித்து விட்டு என்ன தப்பா புரிஞ்சுகிட்டு இருக்காங்க சம்மந்தி அம்மா என்று சொல்லுகிறார். அவர்களும் இவரை தெரியாதது போல் காண்பித்துக் கொள்கின்றனர். உடனே சம்மந்தி மாதிரி நீங்களும் என்னை சந்தேகப்படாதீங்க ஆனா சொல்லப்படி பார்த்தால் நீங்க தான் இந்த விஷயம் தெரிஞ்சு நேரா இங்க வந்து விசாரிச்சு இருக்கணும் ஆனா நான் தான் விசாரிச்சுகிட்டு இருக்கேன் என்று சொல்ல சாரி சம்பந்தி என்று சொல்லிவிட்டு கோபி சென்று விடுகிறார் உடனே சுதாகரிடம் என்ன சார் என்னோட ரெஸ்டாரன்ட்னு சொல்லிட்டீங்க என்று சொல்ல ஆமா முதல்ல இந்த ரெஸ்டாரன்ட் வாங்கற ஐடியாவை எனக்கு கிடையாது சம்பந்தமா ஓவரா பேசினாங்க அவங்கள அடக்கறதுக்காக தான் நான் இதை வாங்கினேன் அப்போ இது நம்மளோட குரூப்ல ஆட் பண்ண வேணாம்னு சொல்ல வேணாம் இதுக்கொரு தனியா பேர் வச்சு நீயே ரன் பண்ணிரு என்று சொல்லி இதுதான் நம்மளுக்கு இப்போதைக்கு சேஃப் என சொல்லுகிறார்.
மறுபக்கம் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யா வந்தவுடன் வழக்கம் போல் ஈஸ்வரி செழியன் கோபி எனும் மூவரும் சம்மந்தி ரொம்ப நல்லவரு நீயா எதுக்கு இது மாதிரி பேசிகிட்டு இருக்கேன் என்று சொல்ல எழிலும் சேர்ந்து நானும் விசாரிச்சமா ஏதோ சுபாஷ் என்ற ஒருவர் வாங்கி இருக்கிறதா சொன்னாங்க என்று சொல்ல சரி அவரு நல்லவரா போயிட்டாரு நான் பொய் சொல்றவரா போயிட்டேன் அவர நம்புவீங்க பாக்யாவை நம்பறது உங்களுக்கு ரொம்ப கஷ்டம் அதனால தான் நீங்க எதுவும் நம்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். மறுபக்கம் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு வர அங்கு என்ன நடக்கிறது? வேலை செய்பவர்கள் என்ன கேட்கின்றனர் ?பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.