பிரச்சனையிலிருந்து வெளியே வந்த பாக்யா, அதிர்ச்சியில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்யா பிரச்சனையிலிருந்து மீண்டு வர, கோபி அதிர்ச்சியாகியுள்ளார்.


baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் முன் வந்து அனைவரும் கூச்சல் போட ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் ரெஸ்டாரண்டை உடைக்க முயற்சி செய்கின்றனர் போலீஸ் மற்றும் எழில் என அனைவரும் தடுத்தும் மக்கள் கேட்காமல் அத்து மீறுகின்றனர்.

பாக்யா ராஜசேகர் சாருக்கு போன் பண்ண அவர் முதலில் எடுக்காமல் இருக்க பிறகு போனை எடுத்து மீட்டிங்கில் இருந்ததாக சொல்லுகிறார். அவரிடம் ஈவினிங் தரேன் என்ற சொன்ன பணத்தை இப்பொழுது தர முடியுமா சார் என்று கெஞ்சி கேட்க அவர் உங்களுடைய நேரம் இப்பதான் ஒருத்தர் காசு கொடுத்துட்டு போனாரு நான் எடுத்துக்கிட்டு வரேன் என்று சொன்னவுடன் பாக்யா சந்தோஷப்படுகிறார் உடனே அவர்களிடம் வந்து அரை மணி நேரம் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கேட்கிறார். பிறகு அரை மணி நேரம் ஆனது இன்னும் ஆளில்லை என்று சொல்ல ராஜசேகர் பணத்துடன் காரிலிருந்து இறங்குகிறார். கொஞ்சம் டிராபிக் ஆயிடுச்சுமா என்று சொல்ல சரி பரவால்லங்க சார் என்று சொல்லிவிட்டு லிஸ்டில் இருப்பவர்களுக்கு பாக்யா பணத்தை கொடுக்கிறார்.

பிறகு பாக்யாவும் பழனிச்சாமியும் காபி குடித்துக் கொண்டே என்னை மன்னிச்சிடுங்க மேடம் உங்களுக்கு ஒரு ஹெல்ப் என்று தேவைப்படும் போது என்னால் அங்கு இருக்க முடியல என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் பரவாயில்லையென்று சொல்லியிருந்தாலும் என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம் என்று பேசிக் கொண்டிருக்கிறார் எழில் வெளியே நின்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிற அந்த நேரம் பார்த்து செல்வி வருகிறார் வாங்க தம்பி காபி குடிக்கிறீங்களா என்று கேட்க வேணாம் என்று சொல்லிவிடுகிறார் என் தம்பி இங்கே நின்னுகிட்டு இருக்கீங்க என்று கேட்க மனசு சரியில்லகா அம்மா இவ்வளவு கஷ்டத்துல இருந்து என்னால எதுவுமே பண்ண முடியலையே என்று சொல்ல நீங்க தானே எல்லாமே கூட நின்னீங்க என்று சொல்ல நிக்கறதுனால என்ன அக்கா ஆகிட போகுது இவ்வளவு கஷ்டத்துல அம்மா கலங்கி நின்னப்போ என்னால உதவி பண்ண முடியலையே என்ற வருத்தப்பட நீங்க பணம் கொடுக்கிற இடத்தில இருந்தாலும் அக்கா வாங்கி இருக்க மாட்டாங்க உங்ககிட்ட இருந்து என் அன்பு மட்டும் தான் அவங்க எதிர்பார்க்கிறார்கள் என்று பேசிக் கொள்கின்றனர்.

பழனிச்சாமி பாக்கியாவிடம் நான் கேட்கிறேன் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே இவ்ளோ பணத்துக்கு கஷ்டப்பட்டு ஏன் என்கிட்ட கேக்கல அப்போ என்ன நட்பா இருக்கிற இடத்தில கூட நான் இல்லையா என்று கேட்க கண்டிப்பா அப்படி எல்லாம் இல்ல சார் எனக்கு எந்த இடத்துலையோ பணம் கிடைக்கலைன்னா கண்டிப்பா நான் உங்ககிட்ட தான் கேட்டிருப்பேன் அது மட்டும் இல்லாம நான் உங்களை ரொம்ப க்ளோஸ் ஆன நட்பா நினைக்கிறதுனால தான் கேட்கல அதனால விரிசல் வந்துடக்கூடாதுன்னு தான் கேட்கல என்று சொல்ல இருந்தாலும் எனக்கு கஷ்டமா தான் இருக்கு என்று பழனிச்சாமி சொல்லுகிறார். பரவால்ல விடுங்க சார் அது தான் எல்லா பிரச்சினையும் சால்வ் பண்ணிட்டோமே நீங்க என்கூடவே தான இருந்தீங்க அதுவே எனக்கு போதும் என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு கோபி செழியனை ஏமாற்றி உட்கார வைத்துக் கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து போன் வர கஸ்டமர்ரிடம் பேசுவது போல வெளியே போய் சென்று பாக்யா அரெஸ்ட் பண்ணிட்டாங்களா? ரெஸ்டாரன்ட் க்ளோஸ் பண்ணிட்டாங்களா? என்றெல்லாம் ஆர்வத்துடன் கேட்க அப்படி எல்லாம் கிடையாது அவங்க பணத்தை கொடுத்துட்டாங்க எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னவுடன் கோபி டென்ஷன் ஆகிறார். உடனே செழியன் எப்பப்பா வருவார் என்று கேட்க வரும் போது தான் வருவாங்க என்று டென்ஷனாக பேச திரும்பவும் சாரி செழியா வேல மேல டென்ஷன் என்று சமாளிக்கிறார். அந்த நேரம் பார்த்து கோபியின் நண்பர் செந்தில் வர என்ன செழியன் இங்க இருக்க என்று கேட்க இந்த மாதிரி அப்பா ஒரு பிரண்டு கிட்ட சொல்லி வேல அரேஞ்ச் பண்ணி தரேன்னு சொன்னார் என்று சொல்ல கோபி அந்த நண்பர் டெல்லியில் இருப்பது தெரிந்தே செழியனை ஏமாற்றி இருக்கிறார் அது குறித்து செந்தில் சொல்ல வர ஜாடை காட்டி கோபி சொல்ல வேண்டாம் என சொல்லுகிறார். உடனே செழியன் சென்று விட ஏண்டா இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க அவன் டெல்லிக்கு போனது உனக்கு தெரியாத மாதிரி பண்ணிட்டு இருக்க என்று சொல்லுகிறார்.

பாக்யாவை மட்டும் தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கேன் பார்த்தா செழியனையும் ஏமாத்திக்கிட்டு இருக்க என்று கேட்க இப்ப சொன்னது வேணா பொய்யா இருக்கலாம் ஆனா நான் பேசிட்டேன் ஆனா ஊருக்கு வந்த உடனே ஃபர்ஸ்ட் மீட் பண்றது செழியன் தான் இருக்கும் என்று சொன்னா நீ என்னதான் சொன்னாலும் இது ஏமாத்துற மாதிரி தானடா என்று சொல்லுகிறார் இப்போ அவங்க எல்லா பிரச்சனையும் சால்வ் பண்ணிட்டாங்க என்ன பண்ணுவ என்று கேட்டேன் அதை எப்படி கொடுத்து இருப்பா எல்லாத்துக்கும் தான் காரணம் அந்த லாம் போஸ்ட் இருக்கானே அவங்க கிட்ட இருந்து வாங்கி கொடுத்து இருப்பா என்று சொல்ல பிரச்சனையே தான் சால்வ் பண்ணிட்டாங்களே அப்புறம் என்ன என்று கேட்கிறார் பணத்தை கொடுத்துட்டா மட்டும் எல்லாரும் சாப்பிட வந்துருவாங்களா கெட்டுப்போன கறியில சமைச்சு இருக்கா யாரும் வர மாட்டாங்க இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான் என்று கோபமாக பேசுகிறார்.

பாக்கியாவை அழிக்க கோபி என்ன செய்யப் போகிறார் கோபியின் திட்டம் என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


baakiyalakshimi serial episode update
baakiyalakshimiLatest newsserialtamilcinemaஎபிசோட்கோபிபாக்கியலட்சுமிபாக்கியலட்சுமி எபிசோட்