Browsing author

Suresh

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் விஜய் பட நடிகை..

பிரபாஸ், தற்போது ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘பவுஜி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. ‘தி ராஜா சாப்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்த பண்டிகையில் விஜய்யின் ஜனநாயகம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படங்களும் வெளியாகின்றன. இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ படப்பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி கதாநாயகியாக […]

கரூர் சம்பவம் தொடர்பாக, ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல்..

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு […]

கரூர் சம்பவம் பற்றி நடிகை கயாடு லோஹர் சர்ச்சைப் பதிவா?: விளக்கம்..

‘கரூர் சம்பவத்தில் எனது நண்பரை இழந்துவிட்டேன். அனைத்தும் தவெகவின் சுயநல அரசியலுக்காக. உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் விஜய்?’ என்று நடிகை கயாடு லோஹர் பதிவிட்டதாக இணையத்தில் வைரலானது. இது தொடர்பான புகைப்படங்களும் பரவின. இது தொடர்பாக கயாடு லோஹர் தனது எக்ஸ் தளத்தில், ‘எனது பெயரில் பரவும் எக்ஸ் தளக் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. மேலும், அங்கு வெளியிடப்பட்ட அறிக்கைகளும் என்னுடையது அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயர […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை தொடர்ந்து, புதிய கதைக்களத்தில் சசிக்குமார்..

2023-ம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் ‘யாத்திசை’. இதன் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது. இவர் தற்போது ஜே.கே ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இது தொடர்பாக தரணி ராசேந்திரன் தெரிவிக்கையில், ‘சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது […]

இரட்டை வேடங்களில் சன்னி லியோன் நடிக்கும் படத்தின் கதை..

வினில் வாசு இயக்கும் படத்தில் சன்னி லியோன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ‘கௌர் vs கோர்’ என்பது படத்தின் பெயர். 2070-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இப்படம், நம்பிக்கை, அடையாளம் மற்றும் உயிர்வாழ்வது குறித்து பேசுகிறது. அறிவியலும், நம்பிக்கையும் மோதும் உலகில் கதை நடக்கிறது. நம்பிக்கை, விசுவாசம் மற்றும் உண்மையின் மதிப்பு போன்ற கேள்விகளை எழுப்பும் ஒரு மோதலின் மூலம் விதியால் பிரிக்கப்பட்ட இரண்டு சகோதரிகளின் பயணத்தை இப்படம் சொல்கிறது. மேலும், இப்படம் குறித்து இயக்குனர் வினில் […]

‘மீசையை முறுக்கு-2’ படத்தில் தாதாவாக நடிக்கிறாரா இசையமைப்பாளர் தேவா?

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தினை சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்தில் தாதாவாக நடிக்க ஹிப் ஹாப் ஆதி தன்னை அணுகியதாக தேவா தெரிவித்துள்ளார். இது குறித்து தேவா, ‘ஹிப் ஹாப் ஆதி என்னை சந்தித்து கதையொன்று கூறினார். ’மீசைய முறுக்கு […]

பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ படத்தின் அடுத்த பாகம்..

‘ஓஜி’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என்பதை பார்ப்போம்.. சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஓஜி’ படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வசூலில் 200 கோடியை கடந்திருக்கிறது. இப்படத்தின் மூலம் யுனிவர்ஸ் ஒன்றினை உருவாக்கி இருக்கிறார் சுஜித். மேலும், ‘ஓஜி’ படத்தின் 2-ம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இயக்குநர் சுஜித் தெரிவிக்கையில், ‘ஜப்பானில் […]

சினிமா எனக்கு எல்லாம் கொடுத்திருக்கிறது: விக்ரம் பிரபு பெருமிதம்..

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி […]

நடிகை அபிராமியின் ‘திராவிட வெற்றிக் கழகம்’: வைரலாகும் நிகழ்வு..

விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதோ ‘திராவிட வெற்றிக் கழகம்’ பற்றிப் பார்ப்போம்.. கடந்த 2016 ஆம் ஆண்டு யூடிப்பில் வெளியான ‘Ctrl Alt Del’ என்ற சீரிஸ் மூலமாக கலைப்பயணத்தை தொடங்கிய பிக்பாஸ் புகழ் அபிராமி 2017 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான ‘நோட்டா’ படத்தின் வாயிலாக சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து ஓடிடியில் ரிலீசான ‘களவு’ படத்தில் […]

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை; கவுரவிப்பு..

தமிழ் சினிமாவில் கானா பாடல்களால் தனித்த முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர். மேலும் இவரது இசையமைப்பில் வெளியான பாட்ஷா, அருணாச்சலம், ஆசை, வாலி, நேருக்கு நேர், குஷி, காதல்கோட்டை போன்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேவா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தேவா கூறும்போது, ‘செப். 24-ந்தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் என்னை வரவேற்றனர். அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மரியாதைக்குரிய செங்கோல் […]