பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ படத்தின் அடுத்த பாகம்..

‘ஓஜி’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என்பதை பார்ப்போம்..

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஓஜி’ படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், வசூலில் 200 கோடியை கடந்திருக்கிறது. இப்படத்தின் மூலம் யுனிவர்ஸ் ஒன்றினை உருவாக்கி இருக்கிறார் சுஜித். மேலும், ‘ஓஜி’ படத்தின் 2-ம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இயக்குநர் சுஜித் தெரிவிக்கையில்,

‘ஜப்பானில் பவன் கல்யாண் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும், அர்ஜுன் தாஸ் பதவியேற்ற பின்பு தற்போதைய கதையில் என்ன நடந்தது என்பதையும் ஒரே சமயத்தில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இரண்டு படங்களாக உருவாக்கி சில மாத இடைவெளியில் வெளியிட உள்ளார்கள்.

’ஓஜி’ படத்தின் அடுத்த பாகங்கள் தொடர்பாக இசையமைப்பாளர் தமன் தெரிவிக்கையில், ‘அப்படத்திலிருந்து பல்வேறு பாகங்களை உருவாக்க திட்டம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் இருவரின் பேட்டியின் மூலம், ’ஓஜி’ படத்தின் பல்வேறு பாகங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

ஆனால், அரசியலுக்கு சென்றபின் பவன் கல்யாண் புதிய படங்கள் எதையுமே ஒப்புக் கொள்ளவில்லை. முன்பு ஒப்புக் கொண்ட படங்கள் அனைத்தையுமே முடித்துக் கொடுத்துவிட்டார். இதனால் ‘ஓஜி’ படத்தின் அடுத்த பாகங்கள் குறித்து பவன் கல்யாண் என்ன முடிவு செய்யவிருக்கிறார் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

plans for the sequel to og 1 movie
actor bawan kalyancollectionstoryஅர்ஜுன் தாஸ்பவன் கல்யாண்