Browsing author

Suresh

கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம்: விஜய் ஆறுதல்..

கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக […]

‘ஓஜி’ பட இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய படம்..

நானி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல்கள் காண்போம்.. பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓஜி’ படத்தின் இயக்குநர் சுஜித். இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது நானி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதன் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு நானி – சுஜித் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள். முன்னதாக, நானி படத்தின் பணிகளை பல மாதங்களாகவே செய்து வந்தார் […]

அரசியலில் போட்டி பயங்கரமானதாக இருந்தால்தான், வெற்றி நியாயமானதாக இருக்கும்: பார்த்திபன் கருத்து..

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; ‘தற்போதைய அரசியல் சூழலில் நிறைய வசதியும், பணமும் தேவைப்படுகிறது. மனதில் வீராப்பும், நல்ல எண்ணமும் இருந்தால் கூட, அதை மட்டும் வைத்துக் கொண்டு இங்கு அரசியல் செய்துவிட முடியாது. அரசியல் என்பது வேறொரு மிகப்பெரிய களம். புதிதாக யார் வந்தாலும் அவர்களை நான் வரவேற்கிறேன் யாரோ ஒருவர் மட்டும் ஓடிச்சென்று பதக்கம் வாங்குவதற்கு பதிலாக, ஒரு பெரிய கூட்டமே […]

மம்முட்டி-மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் அப்டேட்ஸ்..

மம்முட்டி – மோகன்லால் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘பேட்ரியாட்’ எனப் பெயரிடப்பட்டு டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய படம் ஒன்றில் நடித்து வந்தார்கள். இப்படம் மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் மம்முட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது அவர் உடல்நிலை தேறி திரும்பியிருப்பதால் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு ‘பேட்ரியாட்’ என பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், […]

சினிமாவை கொல்லாதீர்கள்: பவன் கல்யாண் பேச்சு..

‘ஓஜி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘ஓஜி’ படத்தின் முந்தைய பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார் பவன் கல்யாண். மேலும், இப்படத்தில் ஜப்பானுக்கு சென்று சில காட்சிகளை படமாக்க இயக்குநர் விரும்பினார். ஆனால், தன்னால் முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துவதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் பவன் கல்யாண். மேலும், அவர் பேசும்போது, ‘ரசிகர்களுக்கு படத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. […]

‘வேற லெவல் சார்’: வெற்றிமாறன் சொன்ன கதையை கேட்டு சிம்பு வியப்பு..

வடசென்னை கதைக்களத்தில் உருவாகவிருக்கும் எஸ்டிஆர் 49 படத்தின் தகவல்கள் காண்போம்.. வெற்றிமாறன் இயக்க கலைப்புலி தாணு தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார் சிம்பு. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் கதை பற்றி சுவாரஸ்யமான தகவல் கிடைத்திருக்கின்றது. அதாவது, சிம்பு தற்போது தாய்லாந்தில் இருப்பதால், வீடியோ காலின் மூலம் வெற்றிமாறனிடம் கதை கேட்டுள்ளார் சிம்பு. வெற்றிமாறன் முழு கதையையும் சொன்ன பிறகு, சிம்பு அசந்துபோய் விட்டார். ‘வேற லெவல் சார்..’ என […]

கலக்கப் போவது யாரு?: ஜனநாயகனா, பராசக்தியா, ராஜா சாப்பா?

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய், சிவகார்த்திகேயன், பிரபாஸ் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகிறது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள். இவற்றில் எந்தப் படம் பொங்கல் வின்னராக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பா உள்ளது. ஜனநாயகன்: அடுத்த ஆண்டு மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் முதன்மையானதாக இப்படம் உள்ளது. காரணம், விஜய் இதனை தனது கடைசிப் படமாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். அவர், தற்போது முழுநேர அரசியலில் இறங்கிவிட்டதாலும், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் […]

லோகேஷ் அடுத்து இயக்குவது ரஜினி-கமல் இணையும் படமா? கைதி-2 படமா?

கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகவிருந்த கைதி-2 படம் கண்டிப்பாக நடக்கும் என சொல்லப்படுகின்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் விரைவில் கைதி-2 படம் துவங்கும். லோகேஷ் சம்பள விஷயத்திலும் படத்தின் பட்ஜெட்டிலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி-கமல் படத்தை இயக்குவாரா? இல்லை, கைதி-2 படத்தை இயக்குவாரா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால், கண்டிப்பாக கைதி-2 படம் […]

பேய்கள் உங்களை துரத்தும்: கரூர் சம்பவம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் பதிவு..

கரூர் சம்பவம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில், ‘நேற்று வரை நம்மோடு பேசித் திரிந்த 40 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி, மூச்சுத்திணறி, கொடுமையாக மரணித்திருக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், மூவர் என பல்வேறு விதமான இழப்புகள். கரூர் முழுவதும் மரண ஓலம். குடும்பங்களில் ஒப்பாரி. இழவு வீடுகளில் வெறுமையைப் பார்த்துக்கொண்டு அம்மா, அப்பா, கணவன், மனைவி, பெற்றோர் என எல்லோரும் விவரிக்கமுடியாத விரக்தியில் அமர்ந்திருக்க – “WE STAND WITH […]

அட்லி-அல்லு அர்ஜுன் இணைந்த படத்தில் பிரபல ஜப்பானிய நடனக்கலைஞர்..

தற்போது அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படமான இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். மேலும் ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத […]