பேய்கள் உங்களை துரத்தும்: கரூர் சம்பவம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் பதிவு..

கரூர் சம்பவம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில், ‘நேற்று வரை நம்மோடு பேசித் திரிந்த 40 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி, மூச்சுத்திணறி, கொடுமையாக மரணித்திருக்கின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், மூவர் என பல்வேறு விதமான இழப்புகள். கரூர் முழுவதும் மரண ஓலம். குடும்பங்களில் ஒப்பாரி. இழவு வீடுகளில் வெறுமையைப் பார்த்துக்கொண்டு அம்மா, அப்பா, கணவன், மனைவி, பெற்றோர் என எல்லோரும் விவரிக்கமுடியாத விரக்தியில் அமர்ந்திருக்க – “WE STAND WITH VIJAY” என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் சமூக ஊடகங்களில் செய்தி பரப்புகிறீர்களே, வீணாய்ப் போனவர்களே! உனக்கு என்ன நடந்தால் நீ திருந்துவாய்? எது நடந்தால் உனக்கு இழப்பின் அருமை புரியும்?

ஒரு விபத்தின் அடிப்படை உண்மைகளை விளங்கிக்கொள்ள முடியாத அளவுக்கா உன் அறிவு மழுங்கியிருக்கிறது? ஒரு நடிகனை ரசிப்பது உன் மனசாட்சியைக் கொல்லும் அளவிற்கா கொண்டுபோய் விடும்?

அவன் நடித்து புகழும், பணமும் ஈட்டியதைவிட உனக்காக என்ன செய்துவிட்டான்? எதற்காக 40 உயிர்களின் இழப்பைக் கூட கொச்சைப்படுத்தும் அளவிற்கு தரம் தாழ்ந்து போனாய்?

தமிழ்நாட்டை வியந்து பார்க்கும் பிற மாநிலங்களும், பிற நாடுகளும், நம்மை ஏளனமாய் பார்க்க வைத்து விட்டீர்களே! மரணித்தவரின் ஆன்மாக்கள் உங்களை விடாது! பேய்கள் உங்களைத் துரத்தும்! உங்கள் வாழ்வு சிறக்காது! அவைகளின் சாபம் உங்களை விரட்டிப் பிடிக்கும்! கொடுமையின் உச்சத்தை நீ அனுபவிக்கும் முன் திருந்திவிடு’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

james vasanthan has spoken out in the karur stampede
actor vijaymusic director james vasanthantvk partyவிஜய்ஜேம்ஸ் வசந்தன்