Browsing author

Suresh

எனது தேனிலவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்: நடிகை திரிஷா பதிலடி..

அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது திரிஷா ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், திரிஷாவுக்கு சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது. இந்த தகவலுக்கு திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். தனது பதிவில் அவர், ‘என்னுடைய வாழ்க்கையை எனக்காக மற்றவர்கள் திட்டமிடுவது […]

விஜயகாந்தின் மகன் நடிக்கும் ‘கொம்புசீவி’ டீசர் நாளை வெளியீடு..

விஜயகாந்தின் மகன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் தகவல்கள் காண்போம்.. விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மதுர வீரன், படை தலைவன் திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னதாக இயக்குனர் பொன்ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கினார். அடுத்ததாக சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் […]

வெங்கட்பிரபு இயக்கவுள்ள சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்..

‘கோட்’ படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இப்படம் தொடர்பாக நண்பரின் வீடியோ பதிவொன்றில் வெங்கட்பிரபு, ‘சிவகார்த்திகேயனை வைத்து தான் அடுத்த படம் இயக்கவுள்ளேன். அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி விடுவோம் என நினைக்கிறேன். இதுவொரு வித்தியாசமான படமாக இருக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்கவிருப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட […]

தனது வெற்றிக்கு காரணம்: பிரதீப் ரங்கநாதன் விளக்கம்..

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதனிடம், ‘உங்களது வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள். கடின உழைப்பா அல்லது அதிர்ஷ்டமா? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரதீப் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கடின உழைப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே யோசித்து வருகிறேன். அதில் எல்லாவற்றிலும் எனக்கு கிடைக்கும் அன்பு முக்கிய காரணம். என்னைப் போன்ற திறமையானவர்கள் நிறைய பேர் […]

சினிமாவில் தினமும் 8 மணிநேரம் பணி: தீபிகா படுகோன் ஆதங்கம்..

சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ‘ஸ்பிரிட்’ படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கான காரணங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கின. தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என்று தீபிகா கூறியதே இதற்கு காரணம் எனப் பலரும் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக தீபிகா படுகோன் பதிலளித்துள்ளார். ‘இந்திய […]

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த பட ஹீரோ..

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படம் பக்கா கம்ரஷியலி்ல் உருவாகி வருகிறது. இப்படமே இன்னும் ரிலீஸாகாத நிலையில் ஓர் இயக்குனராக அவரின் அடுத்த படம் குறித்து கோலிவுட் வட்டாரம் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. அதாவது ‘கருப்பு’ திரைப்படத்திற்கு பிறகு ஆர்.ஜே பாலாஜி ‘குட் நைட்’ பட புகழ் மணிகண்டனை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார். சமீபத்தில் மணிகண்டன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி சந்தித்து கதை பற்றி பேசினர். ‘கருப்பு’ படத்திற்கு பிறகு உடனடியாக இந்த […]

ராஜமவுலி இயக்கும் ‘தாதா சாகிப் பால்கே’ பயோபிக்: ஹீரோ யார்?

‘தாதா சாகிப் பால்கே’ பயோபிக் படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ராஜமவுலி – ராஜ்குமார் ஹிரானி இருவருமே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தினை அறிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானது. இதில் ராஜ்குமார் ஹிரானி படத்துக்கு மட்டுமே ‘தாதா சாகிப் பால்கே’வின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து ஆதரவு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். தற்போது அதிலிருந்து அவர் விலகியிருப்பதாக […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் வில்லன் உபேந்திராவா? கிச்சா சுதீப்பா?

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படம் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் உருவாகத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், வடசென்னை பற்றிய வேறொரு புதிய கதைக்களத்தில் தற்போது சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டு படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக வடசென்னையை அரங்குகளாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அரசன்’ படத்தில் […]

செல்வராகவன் இயக்கும் ‘மெண்டல் மனதில்’ படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் அப்டேட்..

‘மெண்டல் மனதில்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், தொடர்ந்து காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ படம் 2022-ல் வெளியானது. மேலும் பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் கவனிக்கப்படுகிறார். இந்நிலையில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார். […]

மம்முட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை; ஆவணங்கள் பறிமுதல்..

பிரேமலு, நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘லோகா’ திரைப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் தயாரித்த இப்படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், பூடானில் இருந்து சொகுசு கார்​கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்​பாக சென்​னை​யில் துல்​கர் சல்​மான், அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம், கேரளா​வில் மொத்​தம் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரி​கள் சோதனை நடத்​தி​யுள்​ளனர். இந்​நிலை​யில், துல்​கர் சல்​மான் […]