விஜயகாந்தின் மகன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் தகவல்கள் காண்போம்..
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மதுர வீரன், படை தலைவன் திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னதாக இயக்குனர் பொன்ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கினார். அடுத்ததாக சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நாயகியாக தார்னிகாவும் நடித்துள்ளனர்.
தார்னிகா ‘நாட்டாமை’ படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 1996-ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணைப் பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன.
தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை இப்படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் நிறுவனம் ‘கொம்புசீவி’ படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.