Browsing author

Suresh

என்னா.. புரோமோஷன் வியூகம்: அட்லி அணிந்திருந்த டீசர்ட்டின் விலை ஒரு லட்சத்து 12,000 ரூபாய்..

அரசியல் வியூகம் போல, சினிமாவில் இது புரோமோஷன் வியூகம் சார். எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார் இயக்குனர் அட்லி. பின்னர், பாலிவுட் சென்று ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார். தற்போது ஒரு இயக்குநராக மட்டுமின்றி A for Apple film Production என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, படங்கள் தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் […]

ரெண்டு கிழவிகள் பேசிக்கிட்டாங்க: தளபதி விஜய் கட்சி பற்றி, லியோனி விமர்சனம்..

விஜய் மீது, திண்டுக்கல் லியோனி கேலியாய் பேசிய விமர்சனம் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் விஜய் அரசியலில் இறங்கி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டியில் அவர் நடத்திய முதல் மாநாட்டிற்கு பல லட்சம் மக்கள் திரண்டனர். இதனையடுத்து, விஜய் பிற கட்சி பிரமுகர்களின் விமர்சனங்களுக்கும் தொடர்ந்து உள்ளாகி வருகிறார். இந்நிலையில், துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் […]

மோகன்லால் இயக்கத்தில், ரஜினி நடிப்பாரா?: வைரலாகும் கேள்வி..

மோகன்லால் இயக்கும் அடுத்த படத்திலாவது ரஜினி நடிப்பாரா? என்ற கேள்வி வைரலாய் பரவி வருகிறது. நடிகர் மோகன்லால் முதன் முதலாக இயக்கி நடித்துள்ள படம் ‘பரோஸ்’. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இதனை சென்னையில் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், அவர் கூறியதாவது: ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷம். படமும் எனது கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. என்னிடம் நெல்சன் வந்து கதை சொன்னபோது பிடித்திருந்தது, உடனே ஒகே சொல்லிவிட்டேன். கமல் சாருடன் […]

கீர்த்தி சுரேஷின் கன்னத்தை கிள்ளிய வருண் தவான்: நெட்டிசன்ஸ் செம ஃபீலிங்ஸ்..

‘புதுப்பெண்’ கீர்த்தி சுரேஷின் கன்னத்தை வருண் தவான் கிள்ளிய சமாச்சாரம் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி தயாரிப்பில், காளீஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேபி ஜான்’ திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகும் இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய்யின் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து […]

எல்லாமே இருக்கு, நல்லாவே இருக்கு: ‘கேம் சேஞ்சர்’ பட நிகழ்ச்சியில் ராம் சரண் ருசிகரம்..

‘அன்பு ரசிகர்களே.! உங்களுக்கு என்ன வேண்டும், இதோ இங்கே எல்லாமே இருக்கிறது’ என ஒரு தயாரிப்பாளர் உத்தரவாதம் அளித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன்-2 படம் ஆடியன்ஸை திருப்திபடுத்தவில்லை. இதனால், இந்தியன்-3 படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என்ற பேச்சு ஒருபுறம் ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பணிகளில் தீவிரமாக இறங்கினார் ஷங்கர். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகி […]

செல்வராகவன், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் ‘மெண்டல் மனதில்’ ஷூட்டிங் அப்டேட்…

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற வித்தியாசமான காதல் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் செல்வராகவன். இவர், தற்போது நடிகராகவும் பவனி வருகிறார். தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளியில், இப்போது ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜையுடன் சூட்டிங் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. காதலை மையமாக கொண்டு, இந்தப் படத்தின் கதைக்களத்தை செல்வராகவன் உருவாக்கியுள்ளார். இப்படத்தில், ‘காதலை […]

விடுதலை-2 பட முழு வடிவமும் ஓடிடி.யில் காணலாம்: வெற்றிமாறன் தகவல்..

சமூக வேட்கையோடு வெளிவந்திருக்கும் விடுதலை-2 படத்தின் சில காட்சிகள் கட் செய்யப்பட்டது. அந்த காட்சிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் விமர்சனங்களால் வரவேற்கப்பட்டு, வசூலும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறத இப்படம் வெளியாவதற்கு முன்னர், ‘படத்தின் 8 நிமிடக் காட்சிகளை குறைத்துள்ளோம். படத்திற்கு கடினமான உழைப்பை செலுத்தியுள்ளோம்’ என பட வெளியீட்டுக்கு முதல் நாள் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். தற்போது, படம் வெளியாகி விட்டதால் வெற்றிமாறன், ‘விடுதலை’ படத்துக்காக படமாக்கப்பட்ட காட்சிகளின் நீளம் […]

சூரியின் எதிர்பார்ப்பை, சிவகார்த்திகேயன் நிறைவேற்றுவாரா?

‘அமரன்’ திரைப்படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் வேற லெவல் என்பது தெரிந்ததே. இந்நிலையில், சூரி வெளிப்படுத்தியுள்ள திரையார்வம் வருமாறு: திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படம் வரவேற்பை பெற்றதையடுத்து, இதன் 2-ம் பாகமும் வெளியாகி தற்போது கலெக்‌ஷனிலும் எகிறி வருகிறது. இந்நிலையில், நடிகர் சூரி கூறியதாவது: ‘விடுதலை பார்ட் 1 படம் எப்படி மக்களுக்கு பிடித்த படமாக இருந்ததோ, அதே போன்று விடுதலை பார்ட் 2 படமும் உங்களுக்கு பிடித்த படமாக வந்திருக்கிறது. இப்போது, […]

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். மேலும், ‘காசேதான் கடவுளடா’ என்ற வாசகமும் நடைமுறை வாழ்க்கையில் பேசப்படுகிறது. இச்சூழலில், தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படக்கதை குறித்து இங்கே காண்போம்.. பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் ‘இட்லி கடை’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் இயக்கப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கு இடையே சேகர் […]

ப்ரியா, கீர்த்தி சுரேஷ் இருவரும் லைஃப் & வைஃப் லெசன்: இயக்குனர் அட்லீ கமெண்ட்ஸ்..

அட்லி தயாரித்த ‘பேபி ஜான்’ பட புரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இச்சூழலில் நிகழ்ந்த வைரல் சீன்ஸ் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவுக்கு சென்ற அட்லீ, தற்போது இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார். இவர் இயக்கி, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் வசூல் ரூபாய் 1,000 கோடிகளைக் கடந்ததால், இந்திய அளவில் பெரும் கவனம் ஈர்த்தார். இதுமட்டும் இல்லாமல், தான் தமிழில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோரது நடிப்பில் வெளியான […]