மோகன்லால் இயக்கத்தில், ரஜினி நடிப்பாரா?: வைரலாகும் கேள்வி..

மோகன்லால் இயக்கும் அடுத்த படத்திலாவது ரஜினி நடிப்பாரா? என்ற கேள்வி வைரலாய் பரவி வருகிறது.

நடிகர் மோகன்லால் முதன் முதலாக இயக்கி நடித்துள்ள படம் ‘பரோஸ்’. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இதனை சென்னையில் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், அவர் கூறியதாவது:

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷம். படமும் எனது கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. என்னிடம் நெல்சன் வந்து கதை சொன்னபோது பிடித்திருந்தது, உடனே ஒகே சொல்லிவிட்டேன். கமல் சாருடன் பணிபுரிந்துள்ளேன்.

ரஜினி சாருடன் நடிக்க ஒரு வாய்ப்பு. அவரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். எனது (தயாரிப்பாளர் பாலாஜி) மாமனாருடைய பல படங்களில் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக தெரிந்திருந்தாலும், அவருடன் பணிபுரிய வாய்ப்பு அமையவில்லை. ‘ஜெயிலர்’ வாய்ப்பு தான் அமைந்தது. ‘

தற்போது, நான் இயக்கி நடித்திருக்கும் ‘பரோஸ் 3டி’ படத்துக்கு அழைத்திருந்தேன். அவர், ஜெய்ப்பூரில் இருப்பதாக தெரிவித்தார்.

இப்படத்தின் டீஸர், டிரெய்லர் எல்லாம் அனுப்பி வைத்தேன். அவர், இப்படத்தைக் காண ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்’ என்றார்.

அடுத்து நீங்கள் இயக்கும் படத்திலாவது ரஜினி சார் நடிக்க சம்மதிப்பாரா? இருவருமே சூப்பர் ஸ்டார்கள் என்பதால் அப்படியொரு நிகழ்வு ஏற்படுமா? என இணையதள வாசிகள் மோகன் லாலிடம் கேட்டு வருகின்றனர்.

actor mohanlal share his experience rajinikanth
actor mohanlaljailor movieRajinikanthநெல்சன் திலீப் குமார்பரோஸ்