Browsing author

Suresh

விவாகரத்து வழக்கில், ஜெயம்ரவி- ஆர்த்தி இருவரும் இன்று ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை..

ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் நேரில் சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பின்னர், நீதிபதி வழங்கிய உத்தரவு வருமாறு: நடிகர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்து கல்யாணம் செய்து 15 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணத்தால், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, ஜெயம் ரவி, தனது வலைத்தளத்தில், மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதற்கு ஆர்த்தி, ‘இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி எனது ஒப்புதல் இல்லாமல் […]

சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மீண்டும் நடிப்பாரா?: கார்த்திக் சுப்பராஜிக்கு கோரிக்கை..

ஒருத்தன், ஆளே கலர்ஃபுல்லா மாறிட்டு வர்றான்னா.. அவனுக்குள்ள காதல் நுழைஞ்சிட்டு இருக்குன்னு அர்த்தம்’ அதாவது, விஷயம் என்னன்னா சூர்யா-44 படம் இப்டி.. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘கங்குவா’ படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘சூர்யா 44’. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்றதும், இப்படம் கேங்ஸ்டர் அல்லது ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்தார்கள். படத்தின் கிலிம்ப்ஸ் […]

நாம பேசக்கூடாது, படம்தான் பேசணும், அதான் புரோமோஷன்: மோகன் லால் கருத்து..

மோகன்லால் முதன் முதலாக இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ படம், மற்றும் பிரித்விராஜ் இயக்கம் குறித்தும் அவர் தெரிவித்ததாவது: நடிகர் மோகன்லால் முதல் முறையாக ‘பரோஸ்’ என்ற படத்தை இயக்கி நடித்து முடித்திருக்கிறார். இப்படம், வரும் டிசம்பர் 25-ம் தேதி ரிலீசாகவுள்ளது. இது குறித்து பல சுவாரசியமான நினைவுகளை புன்னகையோடு பகிர்ந்து வருகிறார். அவ்வகையில், நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எம்புரான்’ படத்தில் நடித்தது குறித்தும உற்சாகமாய் பகிர்ந்துள்ளார். முன்னதாக, இந்தக் கூட்டணி ‘ப்ரோ டாடி’ என்ற படத்தில் காமெடி […]

சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘கூலி’ படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கே தெரியுமா?

மாஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, ரஜினிகாந்த் நடிப்பில் ஆக்‌ஷன் அவதாரமாய் உருவாகும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்ஸ் பற்றிப் பார்ப்போம்.. ஜெய்ப்பூரில் நடந்து வந்த ‘கூலி’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. முன்னதாக, ரஜினி பிறந்த நாளையொட்டி, அனிருத் இசையில் பாடல் கிளிம்ப்ஸ் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, அடுத்தகட்ட ஷூட்டிங் பொள்ளாச்சி, கோவை மற்றும் கேரளாவில் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் கோவையில் சூர்யா-45′ பட ஷூட்டிங் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில் […]

தளபதி விஜய்யும், பூஜா ஹெக்டேவும் பீச்சில் சந்திப்பு: வைரலாகும் ஷூட்டிங் போட்டோ..

தளபதி விஜய்யின் கடைசிப்பட ஷீட் குறித்து, பூஜா ஹெக்டே தற்போது கொடுத்த அப்டேட் பார்ப்போம்.. மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார். ஆனால், எந்தப் படமும் இவருடைய கதாபாத்திரங்களை பெரிதாக எடுத்துக் காட்டவில்லை. இதனால், இவருக்கு வரும் வாய்ப்பும் ராஷ்மிகாவிற்கு சென்று விடுகிறது. குறைவான படங்களில் நடித்திருந்தாலும், ராஷ்மிகா இன்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் […]

சினிமா-2-ம் பாகம்: சந்தான பாரதியின் கருத்துக்கு, சீனு ராமசாமி கடும் பாய்ச்சல்..

ஒரு திரைப்படம் ஹிட்டானால், அதை 2-ம் பாகமாக எடுத்து வெளியிடுவது தொடர்பாக, இயக்குனர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘விடுதலை-2’ படத்தை பார்த்துவிட்டு வந்த இயக்குநர் சந்தான பாரதியிடம் செய்தியாளர்கள், ‘குணா பார்ட் 2’ எப்போது வரும்? என கேட்க, அதற்கு அவர், ‘குணா ஒரு நல்ல படம். அதை ஏன் பார்ட் 2 எடுத்து கெடுக்க வேண்டும். பார்ட் 2 படம் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற […]

‘மாமன்’ படத்தில் சூரிக்கு தங்கையாக சுவாசிகா கமிட்..

‘தங்கை மேல அண்ணனுக்கு அளவு கடந்த பாசமுங்க, ஆஸ்தி உசிரு ஆவியெல்லாம் அவதாங்க, அப்டி ஒரு சென்டிமென்ட் கதைங்க’ அண்ணன் சூரி, தங்கச்சியா யாரை கமிட் பண்ணலாம்? வாங்க பார்க்கலாம்.. சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி செம ரீச் ஆனதால், சூரிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. இதனையடுத்து, சூரியை ஹீரோவாக ‘விடுதலை’ படத்தின் மூலம் களத்தில் இறக்கிவிட்டார் வெற்றிமாறன். இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிட்டியது. இதனால், இப்படத்தின் […]

விழிகள் விலகினாலும் உள்ளமெல்லாம் லப் டப் லவ் டஃப்: ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி சந்திப்பு வைரல்..

‘தாமரை மேலே நீர்த்துளி போலே, தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?’ என்ற பாட்டு வரிகளுக்கேற்ப இசையும் குரலும் இன்னும் இருக்கலாமா.? லவ் பண்ணுங்க கண்ணுங்களா.. என்கிறார்கள் நெட்டிசன்கள்.. அதாவது, சமாச்சாரம் என்னன்னா.. ஒரு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சிறப்பான ஆண்டாகவே 2024 அமைந்துள்ளது. கேப்டன் மில்லர், தங்கலான் லக்கி பாஸ்கர். மேலும், அமரன் படத்தின் இசை அனைவராலும் பாராட்டைப் பெற்றது. இது மட்டுமில்லாமல், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் இவர் இயற்றி, ரிலீஸ் […]

ஸ்ரீதேவியை கைது செய்ய போலீஸ் சொர்க்கம் செல்லுமா?: இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி..

நடிகர் அல்லு அர்ஜுன் கைது நிகழ்வு தொடர்பாக ராஷ்மிகா கூறும்போது, ‘இதயம் உடைகிறது, திரையரங்கில் உயிரிழப்பு நேர்ந்தது என்பது, துரதிர்ஷ்டமாக நடந்த விபத்து’ என்றார். தற்போது, இயக்குனர் ராம்கோபால் வர்மா இது குறித்து, போலீஸ்க்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி வெளியான படம் புஷ்பா 2 தி ரூல். அதற்கு முந்தைய நாள் அதாவது 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு இரவு […]

நீங்கள் இயக்கியதில் அதிக உழைப்பை எடுத்துக்கொண்ட படம் எது?: வெற்றிமாறன் பதில்..

நாளை 20-ந்தேதி விடுதலை-2 ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ள திரையனுபவம் வருமாறு: திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாவது பாகம் உருவாகி நாளை வெள்ளிக்கிழமை 20-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் […]