என்னா.. புரோமோஷன் வியூகம்: அட்லி அணிந்திருந்த டீசர்ட்டின் விலை ஒரு லட்சத்து 12,000 ரூபாய்..

அரசியல் வியூகம் போல, சினிமாவில் இது புரோமோஷன் வியூகம் சார். எப்படின்னு பார்க்கலாம் வாங்க..

தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார் இயக்குனர் அட்லி. பின்னர், பாலிவுட் சென்று ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார்.

தற்போது ஒரு இயக்குநராக மட்டுமின்றி A for Apple film Production என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, படங்கள் தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் மூலமாக ஏற்கனவே ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ மற்றும் ‘அந்தாகாரம்’ என்ற படங்களை தயாரித்துள்ளார்.

இப்போது ‘தெறி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இயக்குநர் கலீஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜாக்கி ஷெராஃப், சஞ்சய் மல்கோத்ரா, ராஜ்பால் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாளை 25-ம் தேதி திரைக்கு வரும் நிலையில், பேபி ஜான் பட புரோமோஷனில் அட்லி தன் மனைவி ப்ரியாவுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த டீசர்ட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதையடுத்து, அந்த டீசர்ட்டின் விலை பற்றி வந்த தகவலின்படி ரூ.1,12,960 என தெரியவந்துள்ளது. பிரெஞ்சு பிராண்டு கொண்ட கிவன்ஷ் டீ சர்ட்டை அட்லீ அணிந்திருந்தார். அது லேசாக கிழிந்து கிழிந்து இருந்துள்ளது.

இத்தனை லட்சத்திற்கு அந்த டீசர்ட்டில் என்ன இருக்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு ஒரு நெட்டிசன் ‘அட்லி என்பவர் இருக்கிறார்’ என பதில் அளிப்பதும் மறுபடியும் டீசர்ட் பற்றி விவாதிப்பதும் தொடர்கிறது.

இதற்கு பேரு தான், ‘புரோமோஷன் வியூகம்’ என இணையவாசிகள் புரிந்துகொண்டால் போதும், பொன்னான நேரம் மிச்சமாகும்.

director atlee givenchy t shirt price

actress keerthy sureshBaby John moviedirector atleeதெறிஜாக்கி ஷெராஃப்