Browsing author

Suresh

பிரதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில், கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன், அதர்வா ஆகியோரும் நடித்து வருவது தெரிந்ததே. அவ்வகையில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியது படக்குழு. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கவுரவ […]

‘தலைவன் தலைவி’ படத்தின் கலெக்‌ஷன்: படக்குழு உற்சாகம்..

பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. காதல், திருமணம், குடும்ப பிரச்சினை, உறவுக்காரர்களால் ஏற்படும் சிக்கல்கள், விவாகரத்து என உணர்வுப்பூர்வமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், அனைவருக்குமே படத்தின் காட்சிகள், நகைச்சுவை, ஊடல், கூடல் என அனைத்துமே பிடித்திருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதல் நாளில் சுமார் 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கிறது. இதனால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். தற்போதைய சூழலில் இப்படம் தமிழகத்தில் […]

‘மாரீசன்’ படத்தில் வடிவேலுவை வேற மாதிரி பார்க்கலாம்: பகத்பாசில் அப்டேட்..

நாளை ரிலீஸாகும் ‘மாரீசன்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ரோடு டிராமா ஜானரில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தை சுதீஷ் ஷங்கர் இயக்கியுள்ளார். ‘மாமன்னன்’ பட வெற்றியை தொடர்ந்து வடிவேலு, பகத்பாசில் இருவரும் ஜாலியான ஸ்கிரிப்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘மாரீசன்’ படத்தில் சீரியஸான ரோலில் மீண்டும் சேர்ந்து நடித்துள்ளனர். இப்படம், நாளை வெளியாகிறது. காமெடி படமாக இல்லாமல் முற்றிலும் வேறு விதமான திரைக்கதையில் இப்படம் உருவாகி […]

நான் கமல் ரசிகன் என சொல்லித்தான், லோகேஷ் என்னிடம் கதையே சொன்னார்: ரஜினி பேச்சு, வைரல்..

‘கூலி’ படத்தின் ஷுட் முடிந்து டப்பிங் நிறைவு செய்தபிறகு என்னுடைய உதவி இயக்குனர்களிடம் பேசிய ரஜினி சார், ‘என்னிடம் கதை சொல்லும்போது லோகேஷ் கனகராஜ், நான் ஒரு கமல் ரசிகன் என்று சொல்லித்தான் கதையே சொன்னார். கூலி ஆடியோ லாஞ்சுல வைத்து அவரை பார்த்துக்கிறேன்’ என விளையாட்டாக கூறியதாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த தகவல் வைரலாகி வருகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கமல் ரசிகராக இருந்து ரஜினி சாருக்கு படம் பண்ணும்போது, […]

காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து, நித்யாமேனன் மனம் திறந்த பேச்சு..

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் நாளை ரிலீஸாகிறது. இதையொட்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் உறவுகள் குறித்து நித்யா மேனன் மனம் திறந்து தெரிவிக்கையில், ‘எனக்கு மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, ​​வேலைக்குச் சென்ற என் அம்மாவின் மகப்பேறு விடுப்பு முடிந்தது. பாட்டியின் மடியில் என்னைப் போட்டுவிட்டு அம்மா வேலைக்குச் சென்றார். பாட்டியே அம்மாவின் இடத்தை நிரப்பினார். சிறுவயதிலிருந்தே நான் தனிமை விரும்பி. கூட்டத்தில் சேர முடியவில்லை. […]

தன்னைப் பற்றி வரும் மீம்ஸ், ட்ரோல்களுக்கு சாய் அபயங்கர் பதில்..

பாடகர்கள் திப்பு-ஹரிணியின் மகன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். ‘கட்சி சேர’ ஆல்பத்தின் மூலம் பிரபலமாகி தற்போது அடுத்தடுத்த படங்களின் இசைப்பணியில் பிஸியாகி வருகிறார். இது தொடர்பாக ட்ரோல்களும் குவிந்து வருகிறது. அதாவது, அவதார் 4’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ‘ராமாயணா’ படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார், கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்தான் என்றெல்லாம் மீம்ஸ் வழியே ‘ட்ரோல்’களைக் கொட்டி வருகின்றனர். இந்நிலையில், வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ டீசரில் வரும் பின்னணி இசை […]

இளையராஜாவின் பாடல் விவகாரம்: சோனி நிறுவனத்திற்கு கோர்ட் நோட்டீஸ்..

நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படம் வெளியாகியுள்ளது. இதில், இளையராஜா இசையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி’ என்ற பாடல் இடம்பெற்றது. தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகஇளையராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், இது காப்புரிமையை மீறிய செயல் என்பதால், அவ்வாறு […]

10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் அப்பாஸ் ரீ என்ரி..

கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி என பல படங்களில் நடித்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டுவிட்டு நியூசிலாந்து சென்ற அவர், இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார். தற்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். மரியா ராஜா இளஞ்செழியன் […]

சொத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: ரவிமோகனுக்கு கோர்ட் உத்தரவு

ரவி மோகன் நடிப்பில் தற்போது பராசக்தி, கராத்தே பாபு, ஜீனி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதனிடையே, கோவையை சேர்ந்த பாபி டச் கோல்டு யூனிவர்சல் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க, ரவிமோகனை ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக, 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரவி மோகன். தான் கால்ஷீட் ஒதுக்கியபோதும் படப்பிடிப்பை தொடங்காததால், தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. தான் கொடுத்த […]

ரஜினியின் ‘கூலி’ பட 3-வது ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பவர் ஹவுஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிகிட்டு’ மற்றும் ‘மோனிகா’ பாடல்களின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டு, ரசிகர்களை ஈர்த்தது. தற்போது, படத்தின் மூன்றாவது சிங்கிளாக ‘பவர் ஹவுஸ்’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் […]