பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
காதல், திருமணம், குடும்ப பிரச்சினை, உறவுக்காரர்களால் ஏற்படும் சிக்கல்கள், விவாகரத்து என உணர்வுப்பூர்வமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், அனைவருக்குமே படத்தின் காட்சிகள், நகைச்சுவை, ஊடல், கூடல் என அனைத்துமே பிடித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முதல் நாளில் சுமார் 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கிறது. இதனால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். தற்போதைய சூழலில் இப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி அளவுக்கு வசூலாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘மகராஜா’ படம் அளவுக்கு இப்படத்தின் வசூலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
புக் மை ஷோ தளத்தில் முதல் நாளுக்கு 1.6 லட்சம் அளவுக்கு டிக்கெட் புக் ஆகியிருக்கிறது. இது விஜய் சேதுபதியின் முந்தைய படமான ‘ஏஸ்’ படத்தின் ஒட்டுமொத்த டிக்கெட் புக்கிங்கை விட அதிகம். இதனால், இப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால், இப்படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம்
மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.