கூலி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இந்த ட்ரெய்லரில் சூப்பர் ஸ்டாரின் மாஸ் வசனங்களுடன் நாகார்ஜுனாவின் வில்லத்தனமான நடிப்பு பார்ப்போரை மிரட்டி உள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் இணைந்தால் பிளாக்பஸ்டர் ஹிட் மற்றும் பிளாஸ்ட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் அனிருத்தின் பிஜிஎம் தெறிக்கவிட்டு வருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.