அமரன் படத்தின் ஏழு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
amaran movie 7 days collection update
- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், வெளியான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பாராட்டி இருந்தன.
இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. அதாவது ஏழு நாட்களில் உலக அளவில் 180 கோடி வசூல் செய்துள்ளது. இந்த தகவல இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
amaran movie 7 days collection update