அமரன் : 33 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

அமரன் படத்தின் 33 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

amaran movie 33 days collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இந்தத் திரைப்படம் வெளியாகி 33 நாட்களில் 334 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

amaran movie 33 days collection update
33 daysamaran movieamaran movie 33 days collection updatecollection updateஅமரன்சிவகார்த்திகேயன்மேஜர் முகுந்த் வரதராஜன்ராஜ்குமார் பெரியசாமி