கணவரின் பிறந்த நாளை சர்ப்ரைஸாக கொண்டாடியுள்ளார் ஆலியா மானசா.
Alia Manasa celebrated her husband’s birthday as a surprise
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் ஆலியா மானசா. இந்த சீரியலின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல் ஆலியா மானசாவும் சன் டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் நடித்திருந்தார் ஆனால் அந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரம்மாண்டமாக வீட்டை கட்டி வீடியோவையும் வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் ஆலியா மானசா தனது கணவரின் பிறந்தநாளை சர்ப்ரைஸ் ஆக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் விழாவில் கயல் சீரியல் கதாநாயகியான சைத்ரா ரெட்டியும் கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை ஆல்யா மானசா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் சஞ்சீவ்விற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.