அஜித் படத்தில் இணைகிறார் மோகன்லால்?

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்குமாரின் 64-வது படமான இதன் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இதற்கிடையே இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இப்படத்தில் நாயகியாக ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில், ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்-2’ படத்தில் மோகன்லால் மீண்டும் இணைந்துள்ளார்.

ajithkumar movie in act mohanlal
aJITHmohanlalstoryமோகன்லால்ஸ்ரீ லீலா