வடசென்னை 2 அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

‘வடசென்னை 2’ படம் குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த அப்டேட்டை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். சன் நெக்ஸ்டில் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடன் உரையாடிய அவர், ‘வடசென்னை 2’ தொடர்பான தகவலை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், ‘வடசென்னை’ படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் நடத்திய ஆடிஷன் அனுபவத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். இரண்டு நிமிடங்கள் இடைவிடாமல் கெட்ட வார்த்தைகள் பேச சொல்லப்பட்ட சவாலான தருணத்தை அவர் தைரியமாக எதிர்கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும் தனது கல்லூரி கால நினைவுகள், வாழ்க்கை அனுபவங்கள் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். ‘ஆஃபீஸ் கானா’ இசைக்குழுவின் கலகலப்பான பங்களிப்புடன் இந்த எபிசோட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொடர்ந்து ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் துருவ் விக்ரம், ரவி மோகன், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.

Aishwarya RajeshAishwarya Rajesh shares exciting update on Vada Chennai 2DhanushVada Chennai 2ஐஸ்வர்யா ராஜேஷ்வடசென்னை 2