வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது”: பறந்து போ படம் குறித்து நயன்தாரா பேச்சு..!

பறந்து போ பட குழுவை பாராட்டி பேசிய நயன்தாரா.


actress nayanthara talk about paranthu po movie

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் தற்போது பறந்து போ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நலம் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து நயன்தாரா பேசியுள்ளார். அதாவது இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள். இல்லையெனில் ஏரியில் அவர்களுடன் நீந்தி விளையாடுங்கள் அல்லது அவர்களை ராம் சாரின் பறந்து போ படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்..

இது மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை எதை இழக்கிறோம் என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த மிக இனிமையான படங்களில் இந்த படமும் ஒன்று நீங்க பெஸ்ட் இயக்குனர் ராம் சார் என படக் குழுவை மனமார பாராட்டி உள்ளார்.


actress nayanthara talk about paranthu po movie
aboutActress Nayantharaactress nayanthara talk about paranthu po moviemovieParanthu Potalkஅஞ்சலிகற்றது தமிழ்கிரேஸ் ஆன்டனிதங்க மீன்கள்தரமணிபறந்து போபேரன்புமிதுல் ராயன்மிர்ச்சி சிவா