அனுபமா நடித்த ‘லாக்டவுன்’ படத்தின் அப்டேட்ஸ்..

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டிராகன்’ துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன்’ ஆகிய படங்களில் அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படங்களும் வெற்றி பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து, லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘லாக் டவுன்’ படத்தில் அனுபமா நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ளார். படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்பட பலர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் ‘லாக் டவுன்’ படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிகாரபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லாக் டவுன் படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

actress anupama a lockdown movie release date announced

 

actress anupamabison movielockdown movieஅனுபமா பரமேஸ்வரன்துருவ் விக்ரம்