கணவர் ரன்பீர் கபூரை விட, ஆலியா பட்டின் சொத்து மதிப்பு அதிகம்; எப்படி தெரியுமா?

சினிமாவின் கவர்ச்சி அரசியலுக்கு மட்டுமல்ல, வியாபாரத்திற்கும் பயன்படும். அதில், நிலைத்து நிற்பதற்கு “தரமான செயல்பாடுகள்” அவசியம். ஆம், இது தொடர்பாக ஒரு நிகழ்வு பார்ப்போம்..

பாலிவுட் சினிமாவில், கணவர் ரன்பீர் கபூரை விட அதிகமாக சம்பாதிக்கிறார், ஆலியா பட். கணவரை விட அதிக சொத்துக்கள் இவருக்கு உள்ளன.

ஆலியாவின் சொத்து சுமார் 600 கோடிக்கும் அதிகம். அதுமட்டுமின்றி, 300 கோடி மதிப்புள்ள பங்களாவும் கட்டி இருக்கிறார். 3 கோடி மதிப்புள்ள சொகுசு காரும் உள்ளது.

ஆல்யாவின் கணவர் ரன்பீர் மொத்த சொத்து மதிப்பே 345 கோடி தான், ஆலியா பட்டின் சொத்து 550 கோடி. ஆலியா பட் சொந்தமாக தொழிலும் செய்கிறார்.

ஆர்ஆர்ஆர் படம் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகம் ஆனார். அதன்பிறகு, ஆலியா தெலுங்கில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

திருமணத்திற்குப் பிறகு, கணவருடன் பிரம்மாஸ்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். பிரம்மாஸ்திர 1, சிவா, கங்கூபாய் கதியவாடி, கல்லி பாய் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடித்த 20 படங்களில் 7 படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளன. ஹாலிவுட்டில் ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற தொடரில் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிகையாக வெற்றி பெற்றது போல, வியாபாரத்திலும் வெற்றிக் கொடி நாட்டுகிறார். எட்-எ-மம்மா என்ற குழந்தைகள் விளையாட்டு உடைகள் நிறுவனத்தை நடத்தி, புதுமையான வடிவமைப்புகளுடன் ஆடைகளை தயாரித்து, பிராண்ட் நேம் பெறுவதோடு, வியாபாரத்தை அதிகரித்து வருகிறார்.

இந்த பிராண்டை தொடங்கி ஒரு வருடத்திலேயே சுமார் 150 கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

actor ranbir kapooractress alia bhattpropertyஆலியா பட்வியாபாரம்