வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் வீக்கான ஸ்கிரிப்ட்.. விஷ்ணு விஷால் ஓபன் டாக்.!!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் வீக்கான ஸ்கிரிப்ட் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

actor vishnu vishal latest speech viral

விஷ்ணு விஷால் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் எழில் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு சி சத்தியா இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் நிக்கி கல்ராணி ,ரோபோ சங்கர் ,சூரி, ரவி மரியா, ஆடுகளம் நரேன் ,ராஜேந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் தற்போது இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஷ்ணு விஷால் இந்த படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நான் நடிச்சதிலேயே வீக்கான ஸ்கிரிப்ட் இந்த படம் தான். சூரியின் புஷ்பா புருஷன் காமெடியும் ரோபோ ஷங்கரின் அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும் காமெடியும் தான் படத்தை தாங்கி பிடித்தது என்று கூறியுள்ளார்.

மேலும் படத்தோட ஹீரோ நான் இல்லை இவங்க ரெண்டு பேரும் தான் என்று படம் ரிலீஸ் ஆனா அப்புறம் இல்ல கதை கேட்கும் போதே எனக்கு தெரியும் தெரிஞ்சே தான் ஒத்துக்கிட்டேன் அதில் எனக்கு சந்தோஷம்தான் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vishnu vishal latest speech viral

 

'ஆடுகளம்' நரேன்actor vishnu vishalactor vishnu vishal latest speech virallatest speechviralசூரிநிக்கி கல்ராணிரவி மரியாராஜேந்திரன்ரோபோ சங்கர்விஷ்ணு விஷால்