மதுக்கடைகளை மூடிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்

தமிழக அரசியலில் நடிகர்களின் வருகை புதிய விஷயமல்ல. ஆனால், அரசியல் களத்தில் நேரடியாக இறங்கி, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து செயல்பட்ட நடிகர்களில் முக்கியமானவர் விஷால். நடிகர் சங்க நிர்வாகம் முதல் சமூக பிரச்சினைகள் வரை தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு பெரும் கவனம் பெற்றார்.

அந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு கல்லூரி மாணவி தங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என விஷாலிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த விஷால், “நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வந்தால், அந்த கடையை நிச்சயம் மூடுவேன்” என்று உறுதியளித்திருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையிலும், அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முயற்சியை விஷால் கைவிடவில்லை. அப்பகுதி மக்களிடமிருந்து கையெழுத்து மனுக்கள் பெற்று, டாஸ்மாக் கடையை மூட வேண்டிய அவசியத்தை அப்போதைய ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி. டி. வி. தினகரன் மற்றும் தமிழக அரசிடம் கடிதம் மூலம் எடுத்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையை தொடங்கியிருப்பது பெரும் விவாதமாகியுள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள விஷால், பல ஆண்டுகளுக்கு முன் தாம் முன்வைத்த கோரிக்கைகள் தற்போது நடைமுறைக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஆர்.கே.நகர் பகுதியில் தாம் மூட முயன்றதாக கூறப்படும் டாஸ்மாக் கடையும் தற்போது மூடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. “அன்றே நான் செய்ய நினைத்ததை, இன்று முதலமைச்சர் விஜய் செய்து முடித்துள்ளார்” என்ற வகையில், விஜயின் நடவடிக்கைக்கு விஷால் பாராட்டு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Actor Vishal congratulates Chief Minister Joseph VijayJoseph VijayVishal