கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை.. தேவயானியின் பேச்சுக்கு சந்தானம் விளக்கம்..!

கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை என்று தேவையானி பேசியதற்கு சந்தானம் விளக்கம் கொடுத்துள்ளார்.


actor santhanam reply to devayani speech

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம் இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் வருகிற 16-ஆம் தேதிய அதாவது நாளை வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இந்த திரைப்படத்தில் தேவயானியின் கணவரை சந்தானம் கலாய்த்திருப்பார் இது குறித்து சமீபத்தில் பேசிய தேவயானி தனது கணவரை சந்தானம் மோசமாக கலாய்த்தது தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த சந்தானம் அந்த படத்துக்காக நாங்கள் ராஜ்குமார் சாரிடம் பேசும் போதே இது பவர் ஸ்டார் மாதிரியான கேரக்டர்தான் என்று சொல்லி இருந்தோம் முதலில் நாங்கள் ஸ்கிரிப்ட் வசனம் எல்லாத்தையும் சொல்லிவிட்டு இதெல்லாம் உங்களுக்கு ஓகேவா என்று கேட்டுவிட்டு தான் நடிப்போம். காமெடி என்பது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


actor santhanam reply to devayani speech
actor santhanamactor santhanam reply to devayani speechDevayani Speechreplyசந்தானம்டிடி நெக்ஸ்ட் லெவல்தேவயானி