மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு!

ரஜினிகாந்தின் 171-வது படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பு தற்போது மைசூருவில் நடைபெற்று வருகிறது.

கடந்த 4 நாட்களாக மைசூருவில் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் ரஜினிகாந்த், அங்குள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை மைசூரு சாமுண்டி மலைக்கு சென்ற அவர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

- Advertisement -

கோயில் நிர்வாகம் சார்பில் ரஜினிகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர். ரசிகர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்த ரஜினிகாந்த், பின்னர் காரில் புறப்பட்டுச் சென்றார்.

Actor Rajinikanth Offers Prayers at Chamundeshwari Temple in MysoreMysoreRajinikanth