மங்காத்தா vs கோட்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? பிரேம்ஜி கொடுத்த பதில்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார்.

actor premg latest speech update viral

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தனி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் மங்காத்தா இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் திரிஷா ,அர்ஜுன், லட்சுமி ராய், அஞ்சலி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தையும் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்து இருந்தனர் இந்தப் படத்தில் பிரஷாந்த் ,பிரபுதேவா, மோகன், ஜெயராம், போன்ற பல பிரபலங்கள் மிக்க கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரேம்ஜி இடம் மங்காத்தா மற்றும் கோட் இந்த இரண்டு படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்ற கேள்வியை கேட்டுள்ளனர். அதற்கு கொஞ்ச நேரம் யோசித்த பிரேம்ஜி மங்காத்தா என்று கூற அரங்கமே சத்தத்தால் அதிர்ந்துள்ளது.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த இரண்டு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

actor premg latest speech update viral
actor premgactor premg latest speech update virallatest speechupdateviralஅஞ்சலிஅர்ஜுன்கோட்திரிஷாமங்காத்தாலட்சுமி ராய்